தடுப்பூசியைப் பரிசாக அளிக்கும் இந்தியா
கொரோனா தடுப்பு ஊசியை இலவசமாக பங்களாதேஷிற்கு இந்தியா வழங்குவதாக தகவல் வெளியாகின. நாடுகளுக்கிடையே வினியோகம் செய்யும் கொரோனா தடுப்பூசிக்கு ஏற்றத்தாழ்வு இருப்பதாக, மருந்துகள் சம அளவில் பகிர்ந்து அளிக்க தோல்வியை சந்தித்ததாகவும் கவலை தெரிவித்துள்ளது சுகாதார நிறுவனம்.

3.90 கோடிக்கு அதிகமான தடுப்பூசி மருந்துகளை அதிக வருமானம் பெற்றுள்ள 49 நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. 25 மருந்துகள் மட்டுமே பின்தங்கியுள்ள நாடுகளில் வழங்கியுள்ளன. இந்நிலை மாற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
20 லட்சம் கொரோனா தடுப்பு ஊசி மருந்தை இந்தியா இலவசமாக பங்களாதேஷுக்கு வழங்குவதாக ஒப்புதல் அளித்தது என்று பங்களாதேஷ் சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. 20 லட்சம் தடுப்பூசியை பங்களாதேஷுக்கு பரிசாக இந்தியா அனுப்ப உள்ளது.

20 லட்சம் டோஸ் மருந்தை பிரதேயமாக மாற்றியமைக்க பட்டுள்ள விமானத்தில் ஏற்றி இன்று தாகா வந்தடையும் என தகவல் கிடைத்துள்ளன. ஜனவரி 20 சிறப்பு விமானத்தின் மூலம் மருந்துகள் தாகாவில் உள்ள ஹஸ்ராத் ஷாஜாலால் விமான நிலையத்தை அடையும் என்று கூறப்பட்டுள்ளன.