வானிலை அறிக்கை இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளன. இன்று கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.

காரைக்கால் மற்றும் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானம் மேகத்துடன் காணப்படும் பகுதிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள். மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு போன்ற பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல தடை விதித்துள்ளது. நகர்புறங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.