மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரு லட்ச கார்த்திகை தீபம் ஏற்றி ஜொலித்தன
தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை உற்சவ கொடியேற்றம். கோவில் வளாகமே அழகுற ஜொலித்துக் கொண்டிருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டன. கடந்த 24ஆம் தேதி சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க கொடிமரத்தில் நடைபெற்றன.
- பல கோயில்களில் கார்த்திகை திருநாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடந்தேறின.
- கடந்த 24ஆம் தேதி சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க கொடிமரத்தில் நடைபெற்றன.
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டன.

கார்த்திகை தீபத் திருவிழா
கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோயில் வளாகத்திலுள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளினர்.
கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளம், மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் லட்ச தீபம் ஏற்றப்பட்டு உள்ளன.
சன்னதிகளில் லட்ச தீபம்
கோவில் வளாகமே அழகுற ஜொலித்துக் கொண்டிருந்தது. சுவாமி சன்னதி முன்புள்ள வீதியிலும், அம்மன் சன்னதியில் சித்திரை வீதியிலும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றன.

அம்பாளையும், சுவாமியையும் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
சிம்மக்கல், ஆதிசொக்கநாதர் கோயில், பேச்சியம்மன் தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், உப கோயில்களான பல கோயில்களில் கார்த்திகை திருநாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடந்தேறின.