மனநல பிரச்சனையை குறித்து உயர் நீதிமன்றம் விளக்கம்
சிறையில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக தகவல். மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை. சென்னையில் ஏற்கனவே மனநல சிகிச்சை மையம் உள்ளன. தென் தமிழக சிறைகளில் இருப்போரின் தேவைக்காக மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதால் அரசு தரப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- மன நலத்தை பேணும் வகையில் சிறப்பு மனநல சிகிச்சை குழு
- சிறையில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக தகவல்.
- மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை

உயர் நீதிமன்ற மதுரை கிளை
மதுரை சின்ன கொக்கி குலத்தைச் சேர்ந்த ராஜா. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார். சிறையில் இருக்கக் கூடிய மன நோயாளிகள் மற்றும் சிறைவாசிகள். மன நலத்தை பேணும் வகையில் சிறப்பு மனநல சிகிச்சை குழுவினை திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
திருச்சி அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற செவிலியர், சமூக ஆர்வலர், மருந்தாளுநர் ஆகியோரை கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்துவது குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரித்த நீதிமன்றம்
இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் அதிகாரிகளுக்கு மனு அளிக்குமாறு உத்தரவிட்டு இருந்தன. மனைவி, மகள், தாய் உள்ளிட்ட உறவினர்களும் கொலை செய்த குற்றங்களில் சிறையில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக தகவல்.
பேசுவதற்கும், இவர்களைப் பார்ப்பதற்கு யாரும் வராததால் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், கற்பனை, மன அழுத்தம் போன்ற பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாவதாக கருத்து கூறப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கு மனநிலை சிகிச்சை அளிக்கும் மையம். குறைவான படுக்கை வசதிகளை இருப்பதால், குறிப்பிட்ட அளவிலான சிறைவாசிகள் மட்டுமே சிகிச்சைகளுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

மனநல சிகிச்சை
எனவே இதை கருத்தில் கொண்டு திருச்சி மத்திய சிறை மற்றும் மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொரோனா ஊரடங்குகிற்குப் பிறகு, பெரும்பாலானோர் மன நல பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். வன்முறை மனோபாவத்துடன் காவல்துறையினர் நடந்து கொள்வதும், லஞ்சம் வாங்குவது போன்ற மனநல பிரச்சனைகள் இதன் வெளிப்பாடாக கருதப்படுகிறது.

மனநல மருத்துவர்
இந்தியாவைப் பொருத்தவரை சாதாரண மருத்துவர்களை விட மனநல மருத்துவர்களை அதிகம் தேவைப்படுகிறார்கள் என்று தெரிவித்து உள்ளனர். போதுமான அளவு தூங்குவதற்கும், குடும்பத்தினருடன் செலவிடுவதற்கு காவல்துறையினருக்கு வாய்ப்பு இருப்பதில்லை என்பதால் அழுத்தத்தின் வெளிப்பாடாக கூறப்படுகிறது.