காபியில் விளையும் கேடுகள்
காபிக்கு அடிமையானவர்கள் உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு விரைவில் வயதான தோற்றம் ஏற்படுகிறதாம். இதில் குறிப்பாக காலை எழுந்தவுடன் காபி சாப்பிடும் போது வயிற்றில் எளிதாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- காபியில் காஃபின் என்ற நச்சுப்பொருள் உள்ளன.
- நரம்புகளையும், இருதயத்தையும் தூண்ட வல்லது.
- காஃபின் நரம்பு மண்டலமும், தசைகளும் தூண்டுகிறது.

காபி பழக்கத்தை குறைத்து
காபி குடிக்கும் பழக்கம் உடையவர்கள் இதை படித்த பிறகாவது கொஞ்சம் கொஞ்சமாக காபி குடிக்கும் பழக்கத்தை குறைத்து, அதற்கு பதிலாக ஜூஸ் வகைகளை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் குழந்தைகளுக்கு காபி குடிக்கும் பழக்கத்தை பழக்கப்படுத்தாதீர்கள்.
சிறு குழந்தைகள் கூட தற்போது காபி குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி விட்டனர். பரிதாப நிலையை காணக் கூடிய ஒன்றாக உள்ளது. இவற்றை அருந்துவதால் ஏதோ புத்துணர்ச்சி கிடைப்பது போன்று தோன்றினாலும், இதனால் விளையும் கேடுகள் அதிகமாகின்றன.

காபியில் காஃபின் என்ற நச்சு
காபியில் காஃபின் என்ற நச்சுப்பொருள் உள்ளன. நரம்புகளையும், இருதயத்தையும் தூண்டவல்லது. சோர்வுற்ற நிலையில் இதனை அருந்தும் போது இருதயம் தன்னைத் தளர்த்திக் கொள்ளும் நிலை மாறி, மீண்டும் வேலை செய்யத் தொடங்குகின்றன. நரம்பு மண்டலமும், தசைகளும் தூண்டப்படுகின்றன. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சக்தி கூட செலவாகிறது.
நாளடைவில் இருதயம் பலம் இழக்க தொடங்கும். உடலும் சோர்வடையும் நிலையில், அதனைப் போக்க மீண்டும் ‘காப்பி அருந்த வேண்டிய ஒரு அடிமைத்தனத்திற்கு’, நாம் ஆளாக வேண்டிய அவல நிலை ஏற்படுகின்றது. உடலில் காயம் ஏற்படுவதை விட உடலின் சக்தியை இழப்பது ஆபத்தானது, என்பதை மக்கள் உணராதது தான் இப்பழக்கத்திற்கு அடிமையாக காரணம்.

காபியில் விளையும் கேடுகள்
காபியின் உபயோகம் தற்போது மக்களிடையே இரண்டறக் கலந்ததாக உள்ளன. காபியின் அளவு அதிகமாகும் போது வயிற்றில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. அல்சர், பசியின்மை, உயர் ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, இருதய படபடப்பு, அதிகமாக சிறுநீர் கழிதல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு ஆண்மை குறைவு, தலை வலி, அதிக வியர்வை வெளியேறுதல், வலி தோன்றும் நிலையில் தாங்க இயலாமை, அதிக உணர்ச்சி வசப்படுதல் போன்ற தொல்லைகளை உருவாக்குகிறது.