மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 4 முதல் ஆரம்பமாகிறது
பிசிசிஐ கடந்த 2018 முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் என சொல்லப்படும் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை நடத்தி வருகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியம் மகளிர் டி20 கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்டுள்ளன.

- நவம்பர் 4 ஆம் தேதி மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகின்றன.
- நவம்பர் 4 முதல் 9 ஆம் தேதி வரை அமீரகத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளார்.
- டி20 தொடர் சூப்பர் நோவாஸ், ட்ரைல் பிளேசர்ஸ், வேலோ சிட்டி என்ற மூன்று அணிகள் பங்கேற்கின்றன.

இறுதிப்போட்டியோடு சேர்ந்து ரவுண்ட் ராபின் முறையில் 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், மற்றும் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகள் இந்திய வீராங்கனைகள் உடன் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.