கொரோனாவுக்கு பிறகும் “வொர்க் பிரம் ஹோம்” ஆய்வில் வெளியிட்ட தகவல்
இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் புனே, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மேற்கொண்ட சுவாரஸ்யமான கணக்கெடுப்பு நடத்தினார்கள்.
இந்த அறிக்கையில் தற்போது வீட்டிலிருந்து பணிபுரியும் பெரும்பாலான “வொர்க் ஃப்ரம் ஹோம்” ஊழியர்கள் கொரோனா நெருக்கடி முடிந்த பின்பும் தொடர்ந்து “வொர்க் ஃப்ரம் ஹோம்” வேலை செய்ய விரும்புவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வழக்கமான ஊழியர்கள் 74 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்த பிறகும் வீட்டிலிருந்தே வேலையை தொடர விரும்புகிறார்கள். பொது போக்குவரத்தில் நம்பிக்கை இல்லாதது இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணங்களில் ஒன்று. ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் பொதுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கியிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
பதிலளித்தவர்களில் 73 சதவீதம் பேர் தங்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். 21 சதவீதம் பேர் மட்டுமே பொது போக்குவரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். “வொர்க் ஃப்ரம் ஹோம்” நிலமை ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் பயன் அளித்துள்ளன.

போக்குவரத்து மற்றும் அலுவலக இட வாடகை போன்ற செயல்பாட்டு செலவுகள் குறைவதால் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது நிறுவனங்களுக்கும் சாதகமான அம்சங்கள் உள்ளன என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளன.
வருங்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கு நிறுவனங்களுக்கு உதவக்கூடிய தொழில்துறை அமைப்பான இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.