டெல்லி vs பஞ்சாப் பரபரப்புடன் கூடிய சூப்பர் தருணங்கள்
கிரிக்கெட் டி20 போட்டியில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு தான். டி20 போட்டி என்றாலே பரபரப்புக்கு துளிகூட பஞ்சமிருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதி விளையாடிய லீக் மேட்ச்.
பேட்டிங்க்கு சாதகமான துபாய் ஆடுகளத்தில் சேசிங் செய்கின்ற அணிதான் வெல்லும் என்று பீச் ரிப்போர்ட்டில் கொளுத்திப் போட்டு விட்டார் கெவின் பீட்டர்சன். இவர் சொன்ன படி டாஸ் வென்றது. பவுலிங்கை தேர்வு செய்தார் பஞ்சாப் கேப்டன் ராகுல்.

வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட டெல்லி அணிக்கு தொடக்கமே சறுக்கலாக தான் அமைந்துள்ளன. தவான், ப்ரித்வி ஷா மற்றும் ஹெட்மையர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப கேப்டன் ஸ்ரேயஸூம், பண்டும் பொறுப்பாக விளையாடினார்கள். மேட்ச் முழுவதும் பஞ்சாப்பின் கன்ட்ரோலில் இருக்க டெல்லியின் பக்கமாக தனது ஆட்டத்தின் மூலம் திருப்பினார்.
ஸ்டாய்நிஸ் பாதி சதம் கடந்த டெல்லி அணியின் மானம் காத்து பஞ்சாப் வெற்றி பெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தார். மேலும் பஞ்சாப் அணிக்காக ஷமியும், ரவி பிக்ஷோனியம் பவுலிங்கில் எக்கானமி ஆக பந்து வீசி இருந்தனர். ஐபிஎல் வரலாற்றிலேயே டின்டாவுக்கு இணையாக ஒரே ஓவரில் 30 ரன்களை வள்ளல் போல கடைசி ஓவரில் கொடுத்திருந்தார் பஞ்சாப் அணியின் ஜார்டன்.

சுலபமான டார்கெட்டை சேஸ் செய்த பஞ்சாப் அணி முதல் சில ஓவர்களில் அதிரடி காட்டியிருந்தாலும் டெல்லியின் பந்துவீச்சு 10 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பவர் பிளேயின் கடைசி ஓவரில் பந்து வீசிய டெல்லி அணியின் அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த ஓவரின் கடைசி பந்தை வீசிய அஸ்வின் பந்தை தடுக்க முயன்ற போதும் காயம்பட்டு பெவிலியன் திரும்பினார். கடைசியாக மேட்ச் சமனில் முடிய இரு அணிகளும் சூப்பர் ஓவரில் விளையாடியது. ரபாடாவின் வேகத்தில் வெறும் 2 ரன்களை மட்டுமே பஞ்சாப் எடுக்க இதை சுலபமாக கடந்து டெல்லி வென்றது.