நீலாம்பரியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
படையப்பா வில்லி பிரபாஸின் தாயான ராஜமாதா நேற்று பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி சமூக வலைத்தளங்களில் தம்முடைய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அரை சதம் அடித்த நாயகியாக இருந்தாலும் அந்த வயதிற்கு இருக்கக்கூடிய தளர்வுகள் எதுவும் தெரியாமல் சிறு வயது மங்கையாக ஃபிராக்குடன் காட்சி அளிக்கிறார்.

தெலுங்கு திரை உலகில் பிரதான இயக்குனரான கிருஷ்ணா வம்சியை 2003ல் திருமணம் செய்துகொண்டார் ரம்யா கிருஷ்ணன்.

இவர்களின் திருமணத்திற்கு முன்பு தெலுங்கு திரையுலகில் இவருடைய இயக்கத்தில் இரு படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

1998 சந்திரலேகா என்னும் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அக்கினேனி நாகார்ஜுனாவுடன் தன் கணவரின் இயக்கத்தில் நடித்தார்.

இவர்களின் திருமணத்திற்கு பின்பு கிருஷ்ணா வம்சியின் இயக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா படம் வெளியானது. இதன் படப்பிடிப்பு திருமணத்திற்கு முன்பே முடிந்தது. அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் விருந்தினர் தோற்றத்தில் நடித்திருந்தார்.

ரம்யா கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணா வம்சி இருவரும் இணைந்தார் போல் ஊடகங்களின் கண்ணில் படாததால் பலர் பலவிதமாகப் பேசினர்.

கணவனை விட மனைவி நன்றாக சம்பாதிப்பதால் ஈகோ பிரச்சனையால் இருவரும் விவாகரத்திற்கு தாக்கல் செய்துள்ளதாக வதந்திகள் வலம் வந்தது.

உலகம் என்ன கூறினால் என்ன! என்பதுபோல் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையோடு இணைக்காமல் இருவரும் சந்தோஷமான தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணா வம்சிக்கு ரித்விக் கிருஷ்ணா என்னும் மகன். மக்களே இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.
