கலக்கல் கெட்டப்புகளில் ரஜினியின் மகள்
நிவேதா தாமஸ் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென் மொழி திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார்.

நிவேதா தாமஸ் 1995 கண்ணுரில் பிறந்த கேரள மாநிலத்து பெண்குட்டி ஆவார்.

2003ல் தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியுள்ளார் நிவேதா தாமஸ். இவர் ரஜினியுடன் இணைந்து ரஜினிக்கு மகளாக தர்பார் படத்தில் நடித்திருந்தார்.

2019 முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிப்பு ஆஹா ஓஹோ என அதிகம் பேசப்பட்டது.

நிவேதா தாமஸ் 2003ல் மலையாள படம் உத்தரவில் அறிமுகமானார். மலையாள உலகில் இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில விருதினை பெற்றிருக்கின்றார்.

2008 முதல் குருவி, கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்று தமிழ் படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் டிவி சீரியல்களில் ஐந்து சீரியல்களில் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2017 நிவேதா தெலுங்கு படமான லவகுசா படத்தில் ஜூனியர் என்டிஆர்க்கு ஜோடியாக சூப்பராக நடித்திருப்பார்.

மேலும் தமிழில் நவீன சரஸ்வதி சபதம் படத்திலும் மற்றும் தெலுங்கில் நின்னுக்கோரி படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓடிடியில் ரிலீசான வி என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சுதீர் பாபுவிற்கு ஜோடியாக சூப்பரான கதாநாயகியாக பட்டையை கிளப்பி இருந்தார்.

நானியின் 25வது படமான இந்த வி படம் அமேசான் ப்ரைமில் தமிழில் மொழிபயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி கதாநாயகியாக இவருடைய பயணம் படுத்தூள்.

நிவேதா தாமஸ் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக மக்களால் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.