அசுர(ன்) இயக்குனருக்கு இன்று பிறந்தநாள்
வெற்றிமாறன்! இயக்குனர் வெற்றிமாறன்! அந்தப் பேரிலேயே என்னமோ இருக்கு போலங்க என்னம்மா க்ளாஸா படத்தை கொடுக்குராரு.
இயக்குனர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வெற்றிமாறன்
4 செப்டம்பர் 1975ல் கடலூர் மாவட்டம் தமிழ்நாட்டில் பிறந்தவர் வெற்றிமாறன். கடலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தன்னுடைய இளவயது வாழ்க்கையை வாழ்ந்த வெற்றிமாறன் 1999இல் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தார்.
சின்னத்திரையில் கதை நேரம் என்னும் நிகழ்ச்சியில் வாரத்திற்கு ஐம்பதிலிருந்து அறுபது கதையை படித்து அதிலிருந்து தேர்வு செய்து பிரதான இயக்குனரான பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனரான இவர் ஒவ்வொரு கதையின் சாராம்சத்தை பற்றி கூற பாலு மகேந்திரா அதிலிருந்து தேர்வு செய்வார். இவ்வாறு தொடங்கிய திரையுலகப் பயணத்தில் தற்போது எழுத்தாளர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என முப்பெரும் பணிகளை புரிகிறார்.

திரைப்பயணம்
அது ஒரு கனாக்காலம் படத்தில் துணை இயக்குனராக பணிபுரியும் போது தனுஷிற்காக கதை எழுதத் தொடங்கினார் வெற்றிமாறன். தேசிய நெடுஞ்சாலை 47 என்ற படம் தயாரிப்பாளர் இல்லாத காரணத்தால் பெரும் சவாலை எதிர் கொண்டது. அதனைத் தொடர்ந்து வந்த வெற்றி படமே பொல்லாதவன். பொல்லாதவன் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் வெற்றிமாறன் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ஆடுகளம் படம் பட்டி தொட்டி தோறும் பெரும் புகழை இயக்குனரான இவருக்கு மட்டுமல்லாமல் அத்திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் தேடித்தந்தது. நல்ல கால இடைவேளையுடன் தரமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

2007-2019 பொல்லாதவன் ஆடுகளம் விசாரணை வடசென்னை அசுரன் என சில படங்களை இயக்கியிருந்தாலும் அனைத்துமே வெற்றி படமாக இருந்தது. 2020ல் அஜ்நாபி மற்றும் வெப் சீரிஸ் இயக்கியுள்ளார்.
சூர்யாவை கதாநாயகனாக கொண்ட திரைப்படமான வாடிவாசல் அடுத்ததாக பட்டியலில் சேர காத்திருக்கிறது. வடசென்னையின் இரண்டாவது பகுதியும் பெரும் எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் செம்மையாக பணிபுரிந்துள்ளார். அற்புதமான கைதேர்ந்த திரைப்படங்களை மட்டுமே தயாரித்துள்ளார்.
மக்களே! 45வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் வெற்றிமாறனிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.