வி அடுத்த ஓடிடி ரிலீஸ்
பல எதிர்பார்ப்புகளுடன் அடுத்த ஓடிடி ரிலீஸ். செப்டம்பர் மாதத்திற்கான புதிய வரவு மக்களிடையே பல எதிர்பார்ப்புகளை தூண்டுகிறது. 5 செப்டம்பர் 2020 அமேசான் பிரைமில் தெலுங்கு திரைப்படமான வி ரிலீஸாகிறது.
வி
அதிரடி திரில்லராக உருவாக்கப்பட்ட திரைப்படம் வி ஆகும். வி படத்தில் நானி , சுதீர் பாபு , நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி என இரு கதாநாயகிகளுள்ள முன்னணி பட்டாளத்துடன் ஜகபதி பாபு , வென்னேலா கிஷோர் , நாசர் மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை எழுதி இயக்கியவர் மோகனா கிருஷ்ண இந்திரகந்தி மேலும் இப்படத்தின் இசைக்கு எஸ். தமன் மற்றும் அமித் தார்வேதி பணிபுரிந்துள்ளனர்.

வி படத்தின் ஹைலைட்ஸ்
நடிகர் நானி தமிழ் மக்களிடையே நான் ஈ படம் மூலமாக பிரபலமானவர். வி படம் இவருக்கு 25வது படம் மேலும் இப்படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரிலீஸ்
மார்ச் 2020 திரையரங்குகளில் வெளிவர வேண்டிய இந்த படம் கொரோனாவின் தாக்கத்தால் எல்லாமே பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்க இந்தப் படத்தின் ரிலீஸும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு ஐந்து மாதங்களுக்கு மேலும் முடிவடையாமல் தொடர்ந்த நிலையில் உள்ளதால் பல படங்கள் ஓடிடியில் வெளியிட தொடங்கின.

மேலும் பல படங்கள் இந்த வழிமுறையை பின்பற்றவும் தொடங்கிவிட்டனர். அந்தப் பட்டியலில் இந்தப் படமும் சேர்கிறது. தெலுங்கு திரைப்படம் வி அமேசான் ப்ரைமில் 5 செப்டம்பர் 2020 வெளியாகிறது.
அதனை விளம்பரப்படுத்தும் விதமாக சூப்பரான வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர் இப்படத்தின் குழுவினர். நடிகர் நானி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/reel/CEmUQewjkam/?igshid=c03czvs14ks4
ட்ரெய்லர் மற்றும் இந்த விளம்பர வீடியோ என பல விஷயங்கள் இந்த படத்தை பார்க்க விருவிருப்பான எதிர்பார்ப்பை தூண்டுகிறது.