மக்களை ஆச்சரியப்படுத்தும் வித்யுலேகா ராமன்
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் செகண்ட் ஹீரோயினுக்கு டும் டும் கல்யாணம் நடைபெறப்போகிறது. பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வரும் வித்யூலேகா ராமன் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
26 ஆகஸ்ட் 2020 தனது நிச்சயதார்த்தம் சஞ்சய் என்பவருடன் மகிழ்ச்சியுடன் நிறைவேறியது என்பதை சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வித்யுலேகா ராமன்.
வித்யூலேகா ராமன் திரையுலகின் அறிமுகமான படம் நீதானே என் பொன்வசந்தம் ஆகும். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழியிலும் இப்படம் வெளியானது. ஆகையால் தமிழில் மட்டுமல்லாமல் பல தெலுங்கு படங்களிலும் நகைச்சுவை பாணியில் பல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் கதாநாயகிக்கு துணை பெண் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த வித்யுலேகா ராமன்; கதாநாயகனுக்கு துணை ஆண் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த சந்தானத்திற்கு ஜோடியாக கலக்கியிருந்தார் ஆகையால் நகைச்சுவை நட்சத்திரமாக மட்டுமல்லாமல் செகண்ட் ஹீரோயின் லெவலிற்கு பட்டையை கிளப்பி இருந்தார்.
வித்யுலேகா ராமன் சூப்பரான திரை பின்னணி உடைய நடிகராக இருக்க அவரின் உடல் கட்டை பற்றி பல விமர்சனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் தான் குண்டாக ஷப்பியாக இருப்பதை குறைவாக நெகட்டிவாக கொள்ளாமல் அதனை தன்னுடைய வலிமையாக கெத்தாக ஸ்டைலாக மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

ஊரடங்கு காலகட்டத்தில் அதிர்ச்சி தரும் விதமாக தனது உடற்கட்டை மாற்றி அதிக எடையை குறைத்து முன்பைவிட மெல்லிய தோற்றத்துடன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகர்ந்தார் வித்யுலேகா ராமன். தற்போது இவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களில் முன்பை விட அழகாக காட்சியளிப்பதை பார்க்கும் பொழுது மக்களின் மனதில் ‘இவர் உடல் எடை குறைக்க காரணம் இதுவோ!’ என்று எண்ணத் தோன்றுகிறது.

சென்னையில் உடற்பயிற்சி துறை சார்ந்த மனிதர் சஞ்சய். கீடோ கார்ப் சென்னை என்ற பெயரில் அனைவராலும் விரும்பும் உணவு பொருட்களை விற்கும் நிறுவனமாக செயல்படுகிறது. இந்த உணவுப் பொருட்கள் உடல்கட்டை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் டயட் பட்டியலில் இவை சேரும்.
மக்களே வித்யுலேகா ராமன் சஞ்சய் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.