நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஓணம் லவ் ஸ்டோரி
ஓணம் ஆஷம்ஷகல். தமிழ் மக்களுக்கு மலையாளத்துல வாழ்த்து சொல்லிக்கொடுக்கிறது இன்னையோட டாஸ்க்.
ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தில மட்டும் இல்லாம நாடு முழுக்க எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு அத்தப்பூ கோலம் போட்டு மகிழுவாங்க. மேலும் விதவிதமான சாப்பாட்டோட கலி ஆட்டம் ஆடி கொண்டாடுவது கண்கொள்ளாக் காட்சியாக அமையும். ஓணமோட ஹைலைட்டே மலையாள புடவையும் வேஷ்டி சட்டையும் தாங்க.
ஓணம் பண்டிகைக்காக இன்னிக்கி காலைல விமானம் மூலமா கொச்சினுக்கு சென்று சூப்பரா சந்தோசமா கொண்டாடி இருக்காங்க நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி.

ஆமாங்க லேடி சூப்பர் ஸ்டாரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் விமானத்திலேருந்து இறங்குற அப்போ ஒரு காஸ்டியூம்ல போட்டோக்கு போஸ் கொடுத்தவங்க வீட்டுக்கு சென்று சூப்பரான காஸ்டியூம்ல செமையா போஸ் கொடுத்து இருக்காங்க.

போஸ் மட்டும் இல்லங்க வரிகளும் சூப்பரா கொடுத்திருக்கிறாரு இயக்குனர்.

கொரோனா போன்ற கஷ்டமான காலத்தில இந்த மாதிரியான பண்டிகையை கொண்டாடி நம்ம வாழ்க்கையில மகிழ்ச்சிய தங்க வச்சுக்கறது ரொம்ப முக்கியம்னு சொல்லியிருக்காரு.

குடும்பத்துடன் கொண்டாடுவது மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கின்றன. இந்த போட்டோ ஷூட் மூலமா ஒரு குட்டி லவ் ஸ்டோரியே நம்ம தெரிஞ்சிக்கலாம்.

அவன் அவளை நோக்க! ஏதோ ஒரு அற்புதமான விஷயத்தை லேடி சூப்பர் ஸ்டார் ரசிக்க அவங்கள இயக்குனர் ரசிக்கிராரு.

அவளும் அவனை நோக்கினாள். மன்னவன் பார்க்க மங்கை பார்க்காமல் இருக்க முடியுமா! இருவரும் காதல் வெள்ளத்தில் திளைத்தனர்.

இருவரும் இணைந்து வாழ்க்கை எனும் இன்பமான பயணத்தை ரசிக்கத் தொடங்கினர்.
செம க்யூட்டான புகைப்படங்களோட ஓணம் கொண்டாட்டத்த அவங்க ஷேர் செஞ்சுட்டாங்க. மக்களே நீங்க ஷேர் செய்தீர்களா!