தமிழகத்தில் சில தளர்வை தொடர்ந்து எதற்கு தடை தொடரும் என்று அரசு அறிவிப்பு
தமிழகத்தில் இவற்றிற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவிப்பு. மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாயம், அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
புறநகர், மின்சார ரயில், போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு, பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை உயிரியல் பூங்காக்கள், அருட்காட்சியங்கள், சுற்றுலா தளங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தொடர்கிறது தடை.
பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. இணைய வழி கல்வி கற்றல் தொடர்வது மூலம் இவற்றை ஊக்குவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே இருந்து மீண்டும் தொடரும் தடைகள் என்று அறிவிக்கப்பட்டன. செப்டம்பர் மாதத்திற்கு சில தலைப்புகளுடன் கூடிய பொது முடக்க அறிவிப்பை தமிழக அரசு இவரை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.