சிங்கார சென்னையின் சிரங்கார அழகு சுற்றுலா இடங்கள்!
பகுதி 1
புனித ஜார்ஜ் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை பிரிட்டிஷாரால் கட்டப்பட்டது. இக்கோட்டையை சுற்றிலும் அகழி அமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிசாரின் கட்டக்கலைகள் அனைத்தையும் இங்கு காணலாம்.

இக்கோட்டையில் சட்ட மன்றம், தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள், அருங்கட்சியகம், ராணுவம் மற்றும் அரசுக் குடிருப்புகளைக் தவறாமல் விசிட் அடிங்க பிரிட்டிசாரின் பிரம்மாண்டம் அறியலாம்.
பார்வை நேரம் : காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, தேசிய விடுமுறை நாட்கள் இதன் விடுமுறை.
அமைவிடம் : தலைமை செயலகம், சென்னை – 600009.
மெரினா கடற்கரை :
சென்னைக்கு சுற்றுலா வருவோர்க்கு மெரினா கடற்கரை ஒரு வரப்பிரசாதமாகும். வங்காள விரிகுடாக் கடல் பகுதிகளில்
அமைத்துள்ள மெரினா கடற்கரை 13 கி. மீ நீளமுடையது. இக்கடற்கரை உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரையாகும். மாலை வேளையில் மெரினா கடற்கரையில் உலாவினால் இனம் புரியாத மகிழ்ச்சியை உணரலாம். தவிர, இந்த கடற்கரைப் பகுதி நீந்துவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. மேலும் மாலை வேளையில் பொழுதுப் போக்கிற்காக ஆயிரக்கனாக்கனோர் கடற்கரையில் உலா வருவதை காணலாம்.
வள்ளுவர் கோட்டம்:
சென்னையில் நுங்கம்பாக்கதில் அமைத்துள்ள வள்ளுவர் கோட்டம் ஆசியாவின் அரங்கங்களில் மிகப்பெரிய அரங்கமாகும்.

இவ்வள்ளுவர்கோட்டம் திராவிட கட்டிக் கலைக்கு ஒர் எடுத்துக்காட்டு, திருக்குறளின், 133 அதிகாரங்களும் வள்ளுவர் கோட்டத்தில் 133 பளிங்குக்கற்களில் செதுக்கப்பட்டுள்ளன.
பார்வை நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
அமைவிடம் : வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 34
அண்ணா கோபுரம் :
அண்ணா டவர் என்றும் அழைக்கப்படும் அண்ணா கோபுரம் சென்னை அண்ணா நகர் பூங்காவில் அமையப் பெற்றுள்ளது. இக்கோபுரத்தில் சுழற்படிக்கட்டுகள் அமைத்துள்ளன. சென்னை நகரிலேயே இத்தகைய சிறப்பு வாய்ந்த கோபுரம் அண்ணா நகரில் மட்டுமே உள்ளது. வண்ண மயமான

பார்வை நேரம் : காலை 9 மணி முதல் மாலை 8.30 மணி வரை.
மாநகராட்சி கட்டிடம் :
கவர்னர் ஜெனரல் ரிப்பன் பிரபுவின் பெயரை தாங்கி நிற்கும் ரிப்பன் பில்டிங் என்ற சென்னை மாநகராட்சிக் கட்டிடத்தில் அதன் சபைகள், அலுவலகங்கள் இயங்குகின்றன.

தற்போதைய மேயர் என்று அழைக்கப்படும் மாநகரத் தந்தை, இப்பொறுப்புக்கு சென்னை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சென்னை மாநகரின் பெருமைக்குரிய இக்கட்டிடம் 1913 நவம்பர் 26 ம் நாள் திறந்து வைக்கப்பட்டது.
அமைவிடம் : மத்திய தொடர் வண்டி நிலையம் அருகில், பூங்கா நகர்,சென்னை 600003.
உயர்நீதி மன்றம் :
சென்னை நகரில் பார்வையிடக் குறிப்பிடத்தக்க இடங்களில் மற்றோன்று சென்னை உயர்நீதிமன்றம்,

1892ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம் இந்திய முகலாயக் கட்டிட கலைக்கு ஒர் எடுக்காட்டாகும். இந்தியாவின் இரண்டாவது பெரிய நீதிமன்றம் இது. இந்நீதிமன்ற வளாகத்துடன் சென்னை சட்டக் கல்லூரி, ஒரு பகுதியாக இணைந்து செயல்பட்டு வருகின்றது.
அமைவிடம் : பரிமுனை, சென்னை 600001
இராஜாஜி மண்டபம்
இராஜாஜி ஹால் என்று அழைக்கப்படும் இராஜாஜி மண்டபம் பிரிட்டிஷ் அரசு திப்பு சுல்தானை வெற்றி கொண்டதன் நினைவாக பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட விருந்து மண்டபம் ஆகும். இக்கட்டிடத்தின் அழகிய படிக்கட்டுகளும் மேலே அமையப் பெற்றுள்ள பரந்த மண்டபமும் பார்வைக்கு உரியவை. இம்மண்டபத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரல் இராஜாஜி கோபாலச்சரியர் நினைவாக அமைக்கப்பட்ட இம்மண்டபம் அவரின் பெயரால் இராஜாஜி ஹால் என்று இன்று அழைக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் இதன் விடுமுறை நாட்கள்.

அமைவிடம் : ஓமந்தூரார் அரசுத் தோட்டம், அண்ணாசாலை, சென்னை 600002
கலங்கரை விளக்கம் (light house ) :
மெரினா கடற்கரையின் தென்பகுதியில், தங்கநிற மணலின் மேல் வானுயர்ந்த கம்பீரமாக நிற்கும் அழகிய கட்டிடத்தின் மேல் கலங்கரை விளக்கம் (Light house) அமைத்துள்ளது. இது மீனவர்களுக்கும் சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களில் கலங்கரை விளக்கமும் ஒன்று. இது சென்னை வானொலி நிலையத்திற்கு எதிரில் அமைத்துள்ளது.

பார்வை நேரம் : திங்கள் முதல் சனி வரை மாலை 2.00 முதல் 4.00 வரை.
ஞாயிறு 10.00 – 12.00, 2.00-4.00.
அமைவிடம் : மெரினா கடற்கரை.
தியோசோபிகள் சொசைட்டி :
H. P. பிளவாட்ஸ்கி, கவர்னர் H. S. ஒல்காட் ஆகியோரால் மதம் மற்றும் தத்துவ இயல் படிப்புக்காக அமெரிக்காவில் இருந்து 1875ம் ஏராளமான பொருட்செலவில் இந்த தியோசாபிகள் சொசைட்டி உருவாக்கப்பட்டது. இது இயற்கையான மரங்கள் வயதுடைய ஆலமரத்தின் கிளைகளும் விழுதுகளும் 40,000 சதுர அடிவரை பரந்து வளர்த்துள்ளன. இங்குள்ள நூலகத்தில் 1,65,000க்கும் அதிகமான உலகின் பல்வேறு மொழி புத்தகங்கள் காணப்படுகின்றன.
நேரம் : காலை 8 00 மணி முதல் 11 00 மணி வரை
2 30 மணி முதல் 4 30 வரை.
அமைவிடம் : பெசன்ட் அவேன்யூ சாலை, அடையாறு, சென்னை 20
பிர்லா கோளரங்கம்:
பிர்லா கோளரங்கம் கோட்டூர்புரம், காந்தி மண்டபம் அருகில் அமைக்கப்பட்டுள்ள. இந்நவீன கோளரங்கம் அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டு, வானியல் குறிப்புகள் சிறப்பாகச் சேகரிக்க இது கணினிமயமாக அகப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மிக முக்கிய கோளரங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தொலைநோக்கியில் வானியல் நிகழ்வுகளை பொது மக்கள் பார்க்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

பார்வை நேரம் :
ஆங்கிலம் – காலை 10 45, பிற்பகல் 1 15, மாலை 3.45.
தமிழ் – நண்பகல் 12 00, பிற்பகல் 2 30. ஞாயிறு விடுமுறை
அமைவிடம் : கோட்டுர்புரம், சென்னை 600085.
கலாசேத்ரா :
கலாசேத்ரா இந்தியாவின் தரமிகுந்த நாட்டியக்கலைக்கான புகழ்மிக்க நடனப் பயிற்சி நிலையம் ஆகும். தமிழ்நாட்டின் தலைசிறந்த நாட்டிய கலையான பரதநாட்டியத்தை வளர்க்கவும், அதற்கான இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தவும் இக்கலைக்கோயிலை 1936ம் ஆண்டு சென்னையில் நிறுவனர் ருக்மணிதேவி அருண்டேல். மரங்களிடையேயான இயற்கைச் சூழ்நிலையில், பாண்டிய குருகுல முறையில் பல்வேறு கலைப்பிரிவுகள் இங்குக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

அமைவிடம் : திருவான்மியூர் சென்னை 600041
எலியட்ஸ் கடற்கரை :
சென்னையின் தெற்கு கடற்கரை பகுதியில் அமைதியான சூழலில் இன்பப் பயணத்திற்கு உரிய சிறந்த இடமாக அமைத்துள்ளது, எலியட்ஸ் கடற்கரை. கடற்கரைக்கு அருகில் அஷ்டலக்ஷ்மி கோயில் அமைத்துள்ளது.

தவிர, உடல்நல தேவதையான மடோனாவின் ஆலயமும் அனைவரையம் வாழ்த்துவதாக அமையப் பெற்று இருப்பது இன்னும் ஒரு சிறப்பை இங்கு சேர்கிறது.
கன்னிமரா பொது நூலகம் :
14.04.1896 ஆம் நாள் திறக்கப்பட்ட நுலகப் கட்டிடமான இக்கன்னிமரா பொது நூலகம், நாட்டின் முக்கிய தேசிய நூலகங்களுள் ஒன்று. பெரும் அளவிலான அரிய நூல்கள் காலமுறைப்படி இக்கன்னிமரா பொது நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வரலாறு, இலக்கியம், சமயம், அறிவியல், கதைகள், என்று தனித்தனிப் பிரிவுகளும், மாணவர்களுக்குப் பயன்படும் தனிப்பிரிவும் ஆய்வு செய்வதற்கு ஏற்ற முறையில் இந்நூலகம் அமையப்பெற்றுள்ளது. யூபிஎஸ்சி, வங்கி போன்ற போட்டி தேர்வுகளுக்கு படிக்க தேர்வர்களுக்கு தனிவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பார்வை நேரம் : காலை 9:30மணி முதல் மாலை 7: 30 மணி வரை.
அமைவிடம் : பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை 600008
விவேகானந்தர் இல்லம் :
சென்னையின் சிறப்பம்சங்களில் மெரினா கடற்கரைச் சாலையில் அமைத்துள்ள விவேகானந்தர் இல்லமும் ஒன்று. அமெரிக்காவில் டியூடோர் ஐஸ் கம்பெனியில் இருந்து வணிகத்திற்காக இறக்குமதியான ஐஸ் கட்டிகள் வைப்பதற்காக இக்கட்டிடம் பயன்படுத்தப்பட்டது.

1842ம் ஆண்டு வரை இவ்வணிகம் நடைபெற்று வந்தது. குறிப்பாக உள்ளூரில் பெரிதும் வினியோகிக்கக்கப்பட்டது. பிறகு 1885ம் ஆண்டு இக்கட்டிடத்தை வாங்கிய பிலக்கரி ஐயங்கார் இதற்கு கொள்ளான்கோட்டை எனப் பெயரிட்டார். சிக்ககோ உரைக்குப் பின்னர் தமிழகம் வந்த சுவாமி விவேகானந்தர், கொல்கத்தா திரும்பும் வழியில் 1897ம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் 15ம் தேதி வரை இங்கு தங்கியிருந்தார். 1930ம் ஆண்டு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்ட தமிழக அரசு இக்கட்டிடத்திற்கு அவரின் பெயரை வைத்தது.
பார்வை நேரம் : காலை 10:00 மணி முதல் 1: 30 மணி வரை மாலை 3:00 மணி முதல் 7:00 மணி வரை.
அமைவிடம் : சென்னை மெரினா கடற்கரை சாலை.
டைடெல் பார்க்:
ஆசியாவிலேயே கணினி மென்பொருள் தொடர்பான அனைத்து தொழில்நுட்பங்களும் இணைந்து மிகப்பெரும் தொழில் மையமாக அமைத்துள்ள பகுதி டைடல் பார்க்.

பரந்த நிலப்பரப்பில் தொழில் கூடங்கள் மட்டுமல்லாமல் பொழுது போக்கு அம்சங்களாக பில்லியர்ட்ஸ் கோர்ட், நீச்சல் குளம், போன்றவைகளும் ஹிக்கின்பாதம்ஸ், கனரா வாங்கி போன்ற வணிக கூடங்களும் இங்கு இயங்கி வருகின்றன.
அமைவிடம் : தரமணி, சென்னை 600013
தமிழ்நாடு சுற்றுலா வளாகம் :
தமிழக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பலமுயற்சிகளை செய்து வருகின்றது. அதன் மூலம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 8 கிரவுண்ட், 962 சதுர அடியில் தமிழ்நாடு அரசு ஒரு சுற்றுலா வளாகத்தை உருவாக்கியுள்ளது. அனைத்துச் சுற்றுலா. அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்பட இந்த சுற்றுலா வளாகத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

நேரம் : காலை 10 00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
அமைவிடம் : ஓமந்தூரார் அரசினர் தோட்டம், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005.