தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை தகவல்
தமிழக அரசு சார்பில் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க முடியாது என்று அவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று அதற்கான முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டன.
மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து நீதிபதி எழுப்பிய கேள்விக்கு இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன.

இதன் மூலம் தனித்தேர்வர்கள் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் முன்னர் நடைபெற்ற தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் வருகைப்பதிவு அடிப்படையிலும் கணக்கிடப்படும் என்று அவர்களை அரசு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பித்த அவர்களையும் அவ்வாறு தேர்ச்சி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியாகியுள்ளன.
வழக்கு தொடர்பாக விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அக்டோபர் மாதத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முடிவை அரசு இன்னும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.