விநாயகர் சதுர்த்தி மக்கள் வீட்டிலேயே கொண்டாட டெல்லி அரசு அறிவுறுத்தல்
ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பத்திரமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு அறிவுறுத்தி வருகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் இடம் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளன. பதற்றமான இடங்களில் பாதுகாப்புக்காக போலீசாரையும் அரசு பணியமர்த்த உள்ளது என்ற தகவல் வெளியானது.

பந்தல் அமைப்பது திரளான மக்கள் ஒன்றுகூடி விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது தவிர்க்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது டெல்லி அரசு.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று வழக்கமாக நடைபெறும். சமூக கொண்டாட்டங்களை தவிர்ப்பதை உறுதிப்படுத்துமாறு டெல்லி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலினால் பெருமளவில் மக்கள் திரள்வதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசு விளக்கம் கொடுத்துள்ளனர். டெல்லியின் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் இது குறிப்பிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி நாள் அன்று தலைநகர் டெல்லியில் மக்கள் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்துள்ளதாக அறிவிப்பு.