எஸ்பிபி உடல்நிலை குறித்து பிரபலங்கள் பிரார்த்தனை
ஆகஸ்ட் 5ம் தேதி முன்னணி பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைபேசியில் அழைத்தால் உடனடியாக பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு லேசான கொரோனா தொற்று தான் எனவும், யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களில் குணமாகி வீடு திரும்புவேன் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் எஸ்பிபி. உடலில் எந்தவித பிரச்சனையும் இன்றி நலமாக இருப்பதாக இரண்டு நாட்கள் முன்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஆனால் நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா வைரஸ் நோய் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த நிபுணர்கள் குழுவின் அறிவுரை படி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உயிர்காக்கும் கருவிகள் உடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது. தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல் உறுப்புகள் இடையே மற்றும் திசுக்களில் ரத்த ஓட்ட இயக்கமான ஹீமா டைனமிக் மற்றும் பிற உடல்நிலை மருத்துவ அளவுகோல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் உள்ள இந்த அறிக்கை இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒட்டுமொத்த திரையுலகினரும் எஸ்பிபி பூரண நலம் பெற வேண்டிய பிரார்த்தனை செய்யுங்கள் என்று தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவரது உடல்நிலை தொடர்பாக ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பதிவில் இசை ரசிகர்கள் அனைவரும் என் உடன் சேர்ந்து இந்த சகாப்தத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோருவதாக பதிவிட்டிருந்தார்.
எஸ்பிபி அவரது அற்புதமான குரல் நமக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரபு, தனுஷ், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத், கிரிக்கெட் வீரர் அஸ்வின், கிரிக்கெட் வர்ணனையாளர், இயக்குனர் ராதாகிருஷ்ணன், குமார், டிடி, இயக்குனர் மித்ரன் ஜவஹர், தயாரிப்பாளர் போனி கபூர், தேவிஸ்ரீ பிரசாத், பிரசன்னா என பலரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். எஸ்பிபி பூரண நலம் பெற ட்வீட் செய்வதால் இந்திய அளவில் எஸ்பிபி பாலசுப்ரமணியம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கன.