ராணாவுக்கும் சமந்தாவுக்கும் நடுவுல என்ன?
சனிக்கிழமை நடந்த ராணா தகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் திருமணம் பத்தி இன்னிக்கி வரை மக்கள் பேசிட்டு இருக்காங்க. திருமணம் கோலாகலமாக விழாவாட்டம் நடந்தாலும் கொஞ்சம் உறவினர் மற்றும் நண்பர்கள மட்டுமே அழைக்க முடிஞ்சுது.

சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் மணமக்களை தவிர்த்து பரவி வந்த புகைப்படம் சமந்த ருத் பிரபு அக்கினியோடது. இன்னும் ஸ்வாரசியமாக இருந்தது என்னன்னா ராணாவும் சமந்தாவும் மணமகளுக்கு ஹல்தி நடக்கும் சமயத்தில் இவங்க ஜாலியா பேசி சிரிச்சுட்டு இருந்தாங்க.

மஞ்ச கலர் டிரஸ்ல மணப்பெண்ணுக்கு மேட்சிங்கா புது விதமா ட்ரெண்டிங்கான ஆடையில் வந்த சமந்தா ராணாவோட உறவுங்க. எப்படினு யோசிக்கிறீங்களா! நாக சைதன்யா அக்கினி ராணாவோட கசின். இப்போ புரிஞ்சுதா என்ன உறவுனு.

ராணாவோட திருமணம் நடந்த அன்னிக்கி கார்ல இருந்த சமந்தாவோட முகம் மட்டுமே தெரியுர படி போட்டோ ஒன்று வெளியாச்சு. இவங்க என்ன டிரஸ் போட்டு இருக்காங்க என்ற ஆவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

காத்திருப்பு ஒரு வழியா நடுராத்திரி முடிஞ்சுதுங்க. சிம்பிளா சூப்பரா புடவையில அழகா இருந்தாங்க.

ரெண்டு வீட்டார் வழக்கப்படி ராணாவோட கல்யாணம் நடக்க. திருமணத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த மணமக்களின் சடங்குகள்ல பங்கேற்தாங்க சமந்தா.

இந்த பச்ச கலர் புடவைல ரொம்ப சிம்பிளா அழகா இருந்தாங்க. கிட்டத்தட்ட எல்லாருமே க்ரீம் கலர் டிரஸ் போட்டு வந்தவங்க மத்தியில் இவங்க தனித்துவமாக தெரிஞ்சாங்க.

கணவன் காதலுடன் மனைவியின் தலையை வருடுவது சுகமான தருணம்.
அந்த மாதிரி சூப்பரா சமந்தாவும் நாக சைதன்யாவும் செமையா கேண்டிட்டா போஸ் கொடுத்து இருந்தார்கள்.

ராணா-மியூகா திருமணத்துக்கு அப்புறம் தம்பதியரா வீட்டில் பூஜை நடத்துற சம்பிரதாயதுக்கும் சமந்தா வந்தாங்க. சுடிதார்ல பளிச்சுன்னு இருக்காங்க சமந்தா. மணமகள் மியூகாவ விட சமந்தா தாங்க வைரலா இருக்காங்க.

ராணாவோட கல்யாணம்னு இல்லைங்க எந்த ஃபங்ஷனா இருந்தாலும் சமந்தா தாங்க ஹைலைட்.