தன் சொல்லை செயலாற்றிய ஜோதிகா
இயக்குனர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது என்னவென்றால் ஜோதிகா இருபத்தைந்து லட்சம் நிதி உதவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு உதவ நன்கொடையாக வழங்கியிருப்பது பாராட்டுகளை குவித்துள்ளன.
கோவிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா எந்த மருத்துவமனை குறிப்பிட்டுச் சொன்னாரோ அதே தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார் என்ற தகவல் வெளியானது.

இயக்குனர் சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தஞ்சை அரசு மருத்துவமனையில் நடந்த பொது மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படவில்லை இதன் பராமரிப்பு மோசமாக இருந்தது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
நடிகை ஜோதிகா மருத்துவமனையில் நான் பார்த்தவற்றை என் வாயால் கூட சொல்ல முடியாது. எல்லோரும் கோவில் உண்டியலில் காசு போடுறீங்க. பெயிண்ட் அடிக்கிறீங்க. உதவி செய்றீங்க. அதே மாதிரி அரசு மருத்துவமனைகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் செய்யுங்கள் என்ற தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியிருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இதற்கு சில சார்பில் கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. ஜோதிகாவின் மதத்தையும் விமர்சித்தார்கள். ஆனால் மனைவியின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்டு அனைவரையும் ஆஃப் செய்தவர் நடிகர் சூர்யா. இந்நிலையில் ஜோதிகா 25 லட்சம் நிதி உதவியை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு உதவ நன்கொடையாக வழங்கியிருப்பது பாராட்டுக்களைப் பெற்றுத்தந்துள்ளது ஜோதிகாவிற்கு என்று தன் ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.