96 சின்ன நாயகி ஜானுவின் குறும்படம்
96 திரைப்படத்தில் த்ரிஷாவின் இளம் பருவத்தை நடித்த கௌரி ஜி கே ஊரடங்கு காலத்தில் சூப்பரான குறும்படத்தில் நடித்துள்ளார்.
கௌரி கிஷன்
2018ல் வெளியான தமிழ் படம் 96. விஜய் சேதுபதி திரிஷா இணைந்து நடித்த மாறுபட்ட காதல் கதை. திரிஷாவின் பள்ளிப் பருவத்தை சித்தரித்தவர் கௌரி கிஷன். அதுவே அவர் அறிமுகமான முதல் படம்.
தெலுங்கு
96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஜானு என்ற பெயரில் வெளியானது. தெலுங்கில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தை சமந்தா நடிக்க அவரின் இளம் வயதையும் சித்தரித்தவர் கௌரி கிஷன் தான்.
மாஸ்டர்
2020 வெளியாக தயாராக இருக்கும் இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார் கௌரி கிஷன். கொரோனாவால் ஊரடங்கு இடப்பட்டு திரையரங்குகளின் திறப்பிற்காக காத்திருக்கிறது இப்படத்தின் வெளியீடு.
மேலும் படிக்க : செமையா இருக்கும் 96 ஜானுவின் போட்டோ ஷூட்
குறும்படம்
கொரோனாவால் ஒவ்வொருவரும் அவரவர் இடத்தில் இருந்து செய்யக்கூடிய அனைத்தையும் செய்து சாதனை படைத்து வருகின்றனர். ஊரடங்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கௌரி கிஷன் தன் வீட்டிலிருந்தே ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.
மரியாத கண்ணீர் இல்லை
இசை கதையாக அமைந்திருக்கும் மரியாத கண்ணீர் இல்லை என்ற குறும்படம் இன்று மாலை 5 மணி அளவில் இணையதளத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது.
கதைக்கரு
அன்னையைப் பிரிந்த மகளிடம் அவளின் தோழி தொலைபேசியில் தொடர்புகொள்ள இருவரின் நடுவே உரையாடலுடன் ஆரம்பிக்கும் இக்கதை சண்டைப் போட்டுக் கொண்டாலும் அன்னை மகள் பாசத்தை பிரதிபலிக்கிறது.
குழு
தினேஷ் இளங்கோ மற்றும் அக்ஷய் என இரண்டு இயக்குனர்கள் இயக்க, விஷ்ணு கவிக்கு ஜென் மார்டின் இசைக்க, மதன்ராஜ் சித்தரித்துள்ளார். இவை அனைத்தின் முகமாக கௌரி கிஷன் நடிப்பில் வெளியாகியுள்ளது மரியாத கண்ணீர் இல்லை.
நடிகை
படிப்பை முடித்தவுடன் திரையுலகிற்கு வந்து கௌரிக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்றே சொல்லலாம். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் 96 சிறிய நாயகி. மேலும் மேலும் வெற்றி பெற சிலேட்குச்சியின் வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க : மாஃபியா இயக்குனருக்கு இன்று பிறந்த நாள்