சண்டை கள நாயகன் ஓய்வு பெற்றார்
அண்டர்டேக்கர் என்றாலே தெரியாதவர்கள் இருக்க முடியாது. wwe களத்தில் நட்சத்திரங்கள் பலர் ஜொலித்து இருந்தாலும், முன்னிலையில் வலம் வருபவர் அண்டர்டேக்கர் என்றால் அது மிகையாகாது. சண்டைக் களத்தில் இருந்து ஓய்வு பெற்ற அண்டர்டேக்கரை சர்வைவர் சீரிஸ் தொடரின் முடிவில் சிறப்பாக வழி அனுப்பி வைத்தது wwe நிர்வாகம்.
- அண்டர்டேக்கர் என்றாலே தெரியாதவர்கள் இருக்க முடியாது.
- களத்தில் நட்சத்திரங்கள் பலர் ஜொலித்து இருந்தாலும், முன்னிலையில் வலம் வருபவர் அண்டர்டேக்கர்.
- அண்டர்டேக்கர் அறிவித்த ஓய்வு இறுதியானது.
வீரர்கள் ஓய்வு
ஷான் மைக்கேல்ஸ் போன்ற அவரது நண்பர்கள் அவரை வழியனுப்பி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அவர் என் நேரம் வந்து விட்டன. அண்டர்டேக்கர் அமைதியாக உறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறி விடை பெற்றார். wwe வீரர்கள் ஓய்வு அறிவிப்பதும் பிறகு மீண்டும் அவர்கள் வருவது புதிதல்லவே.
அண்டர்டேக்கர் ஓய்வு இறுதி
அண்டர்டேக்கர் அறிவித்த ஓய்வு இறுதியானது. தனக்கு இன்னொரு வாழ்க்கை உள்ளது. கடின உழைப்பின் பலன்களை அந்த வாழ்க்கையில் நான் அனுபவிக்க வேண்டும். மீண்டும் சண்டை களத்திற்கு திரும்ப விரும்பவில்லை என்று அண்டர்டேக்கர் கூறியதாக சில பதிவுகள் இடப்பட்டுள்ளன.
கொடிகட்டிப் பறந்த அண்டர்டேக்கர்
அதிக வெற்றிகளை பெற்றவர் தனித்துவமான பாணியில் 90 முதல் உலகில் கொடிகட்டிப் பறந்து வந்த அண்டர்டேக்கர். அண்மையில் wweல் ஓய்வு பெற்று விட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பல முறை இது போன்ற தகவல்கள் வெளியாகிய போதிலும் முக்கியமான சில போட்டிகளின் போது, இவர் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே.
தனித்துவமான இடத்தை கொண்ட அண்டர்டேக்கர்
30 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் கொண்டுள்ள லெஜன்ட். சண்டைக் களத்தில் துள்ளலான மியூசிக் வானவேடிக்கை என பலர் கொடுத்தாலும், அண்டர்டேக்கர் நுழைவு திகில் பாணியிலேயே இருக்கும். இடி, மின்னல்கள் அவருக்கு வானவேடிக்கை. சாவு மணியின் சத்தமே இவருக்கு மியூசிக். இவருக்கு வரவேற்பு அலங்காரம் என்று சொல்லலாம்.