karma : கர்மாவின் 9 விதிகள்; இதை பார்த்தால் இனி உங்கள் வாழ்வில் தப்பு செய்யமாட்டீர்கள்
கர்மா என்பதற்கு நாம் செய்த செயல்களின் பலன் என்பதை குறிக்கும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வரிகளுக்கு ஏற்ப நாம் செய்த செயல்கள் நல்லவையோ தீயவையோ அதற்கு ஏற்றார் போல் நமக்கு அதற்கான பலன்கள் தேடி வரும். நல்ல செயல்களை நாம் தற்பொழுதும் முன் ஜென்மத்திலும் செய்திருந்தால் எதிர்காலத்தில் நல்லவையே நமக்கு நடக்கும்.
அதுவே தீய செயல்களை முன் ஜென்மத்தில் செய்திருந்தால் அதற்கான பலன் இந்த ஜென்மத்தில் அனுபவிப்பீர்கள். இவ்வாறு நாம் செய்த செயல்களின் வினைகளே கர்மா என்று அழைக்கப்படுகிறது. கர்மாவின் விதிகளை இந்த பதிவில் பார்க்கலாம். கர்மாவின் விதிகளை நாம் தெரிந்து கொண்டால் நம் வாழ்வில் நாம் எப்படி வாழ வேண்டும் எதை நம்ப வேண்டும் எதை செய்ய வேண்டும் என்பதற்கான அர்த்தம் நமக்கு தெரிந்துவிடும்.
கர்மாவின் விதிகள்
முதல் விதி
இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும் அது நமக்கே திரும்பி வரும்.
இரண்டாம் விதி
வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை. நமக்கு தேவையானதை நாம் தான் நடத்திச் செல்ல வேண்டும்.
மூன்றாம் விதி
சிலவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும்.
நான்காம் விதி
நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும்.
ஐந்தாவது விதி
நம் வாழ்வில் நிகழ்பவற்றிற்கு நாமே பொறுப்பு என ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆறாவது விதி
நேற்று இன்று நாளை என இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதே.
ஏழாவது விதி
ஒரு சமயத்தில் இருவேறு விஷயங்களை சிந்திக்க முடியாது.
எட்டாவது விதி
நம் நடத்தை நம் சிந்தனையும் செயலையும் பிரதிபலிக்க வேண்டும்.
ஒன்பதாவது விதி
நம்முடைய முன்காலத்தையே நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டுப் போய்விடும்.