கருடனின் அம்சம் பெரியாழ்வார் ஜெயந்தி
8.7.2022 வெள்ளிக்கிழமை.. இந்த நாள் லட்சுமி கடாட்சம் நிறைந்த மகாலட்சுமிக்குரிய மங்கள நாள் இது மட்டுமின்றி பெரியாழ்வார் ஜெயந்தி.… இந்த நாளின் சிறப்புகளையும் பெரியாழ்வார் குறித்து சில குறிப்புகளையும் இந்த பதிவில் நாம் காண்போம்
- 12 ஆழ்வார்களில் ஒருவராக இருந்தவர் ஆவார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற அழகிய ஊரில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக அவதரித்தவர்.
- இவர் எப்பொழுதும் பகவானை நினைத்து அவரின் நாமத்தையே உச்சரித்து கொண்டிருப்பார் அனுதினமும் ஒவ்வொரு நொடியும் பகவானையே நினைத்து துவைத்து கொண்டிருப்பதால் இவரை “விஷ்ணு சித்தர்” என்று அழைப்பர்.
- ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண்ணால் வராக இருந்தவர் ஆண்டாள். பெருமைகள் நிறைந்த ஆண்டாளின் வளர்ப்பு தந்தையாக விளங்கியவர். வளர்ப்பு தந்தையாக இருந்த இவர் ஆண்டாளை திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்ததால் அரங்கனுக்கே மாமனார் என்ற பெருமையை பெற்றவர்.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு பாமாலையும் பூமாலையும் சாற்றுவதை கைங்கரியமாகக் கொண்டிருந்தார் பெரியாழ்வார்..
இவர் இயற்றிய இரண்டு பிரபந்தங்கள்,
1. திருப்பல்லாண்டு
2. பெரியாழ்வார் திருமொழி
பெருமாளின் மிகப்பெரிய பக்தனாக எப்பொழுதும் அவரின் நாமத்தை துதித்து கொண்டிருந்த மிகப்பெரும் பெருமைகள் வாய்ந்த பெரியாழ்வாரின் அவதார வைபவம் அனைத்து பெருமாள் கோவில்களிலும் மங்களம் நிறைந்த பெரியாழ்வார் ஜெயந்தி அன்று நடைபெறும்.
எனவே 8. 7 .2022 நாளைய தினம் மகாலட்சுமி தாயாரின் திருநாளான வெள்ளிக்கிழமை மற்றும் பெரியாழ்வார் ஜெயந்தி ஆகும். எனவே அருகில் உள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று பெரியாழ்வாரின் அவதார வைபவ நிகழ்ச்சியை கண்டு பயனடைவீர்.