74 வது இந்திய குடியரசு தினம்
இந்தியா மக்களாட்சியில் மலர்ந்து இந்தியாவை வழிநடத்திச் செல்ல இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளை இந்தியா குடியரசு தினமாக கொண்டாடி வருகின்றோம். தற்போது இந்தியாவின் 74 ஆம் குடியரசு தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது 21 குண்டுகள் முழங்கப்பட்டன. ஒவொரு ஆண்டும் குடியரசு நாளில் நாட்டின் முதல் குடிமகன் குடியரச் தலைவர் ராஜ்பாத் வீதியில் கொடியேற்றுவார்.
குடியரசு தின விழா சிறப்பு விருதுநராக எகிப்து அதிபர் ஹாஸ்தல் பதா அல்சிசி மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தங்கர், பிரதமர் , முப்படை தளபதிகள் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். முப்படைகளின் அணிவகுப்பு ஆண்டு தோறும் குடியரசு நாளில் நடத்தப்படும்.
இந்தியாவிலுள்ள மாநிலங்கள் அனைத்தும் தங்கள் பாரம்பரியம் கலாச்சாரம் சிறப்புகளை முக்கியமாய் கொண்டு அதனை வடிவமைத்து டெல்லியில் அரங்கேற்றி வீதியில் அலங்க்கார ஊர்தியில் கொண்டு செல்வார்கள். இந்த அணிவகுப்பில் நமது முப்படைகளின் பிரிவுகள் அனைத்தும் பங்கேற்கும். நாடு முழுவதும் பள்ளிகளில்கொண்டாட்டங்கள் அரங்கேறும். குடியரசு தின விழா கொண்டாட்டங்களாகப் பேச்சுப் போட்டிகள், விளையாட்டுகள், நடனங்கள் நடத்தப்படும்.
தமிழ் நாட்டில் ஆளுநர் கொடியேற்றுவார். வீரதீர சாதனைகள் செய்தவர்களுக்கு பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு மாநிலங்களிலும் இதே போல் கொடியேற்றப்படுகிறது.