7 வயது சிறுமி கொலை என்ன இன்னும் இருக்கு!
கொரோனா நம்மை கொன்று குவித்து வருவது ஒரு பக்கம் இருக்கின்றது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அறந்தாங்கி பகுதியில் கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை உண்டு செய்துள்ளது.
இது கொடூரத்தின் உச்சம் இதனை செய்தவர்கள் தண்டிக்கும் தகுதியை விட அதிகமாக அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி, விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என பெற்றோர்களும் புகார் கொடுத்துள்ளனர். குழந்தையை தேடி கொண்டிருக்கின்ற வேளையில் கருவேல மரத்தின் அருகில் குழந்தையின் உடல் கிடைத்துள்ளது.
பரிசோதனை செய்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் கிடைக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு அந்த பகுதியில் ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரித்து வரப்படுகின்றார்.
இவருடன் ஒருவர் மீண்டும் தேடப்பட்டு வருகின்ரார். 7 வயது சிறுமியின் நாசப்படுத்திய பாவிகளை கண்டம் துண்டாக வெட்டினாலும் தகும் என்றவாறு மக்கள் பேசுகின்றனர்.
இதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்று நடக்காமல் இருக்க உச்சக்கட்ட சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நாட்டில் காமவெறிக்கு குழந்தைகள் பலியாவது பெரும் எண்ணிக்கையில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இவர்களுக்கு ஹேஸ்டக் போட்டு இவர்களை சமூக வலைத்தளத்தில் கண்டந்துண்டமாக காரித்துப்பி எந்த பிரயோஜனமும் இல்லை. இது போன்ற பாவிகள் பார்வையிலிருந்து குழந்தைகளை காக்க வேண்டியது அரசின் கடமை தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் பலமுறை நாசம் செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கின்றது. இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி அரசு அறிவித்துள்ளது ஆனால் இதனை விட அடுத்து ஒரு குழந்தைக்கு ஆபத்து வருவதை தடுப்பதே முக்கிய பணியாக அரசு மேற்கொள்ள வேண்டும்.
போதும், போதும் இதுபோன்ற இழப்புகள் இனி மீண்டும் எழக்கூடாது பார்ப்போம் அரசு என்ன செய்கின்றது என மக்கள் உற்று கவனிக்கின்றனர். இழப்பீடுகளை வழங்குவதைவிட ஒரு நல்ல அரசுக்கு அழகு இனிமேல் இது போன்ற கொரூர இழப்பு ஏற்படுவது தடுப்பதாகும்.