தைராய்டு பிரச்சனையை போக்கும் 5 சூப்பர் உணவுகள்..!
1-நெல்லிக்காய்:-
நெல்லிக்காயில் ஆரஞ்சு பழத்தை விட எட்டு மடங்கு வைட்டமின் சி உள்ளது மற்றும் மாதுளையை விட 17 மடங்கு வைட்டமின் அதிகமாம். இதனால் இளாமையிலையே ஏற்படும் நரைமுடியை தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை வலுப்படுத்துவதாகவும், இதனால், முடி வளர்சி அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2-தேங்காய்:-
“தைராய்டு நோயாளிகளுக்கு தேங்காய் ஒரு சிறந்த உணவு. அது பச்சை தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யக இருந்தாலும் உணவில் சேர்த்துக் கொள்வது பல்வேறு நன்மைகளை அளிக்குமாம். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. தேங்காயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் எம்டிசிகள் அதாவது மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் ஏராளமாக உள்ளன, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது,”
3-பூசணி விதைகள்:-
பூசணி விதையில் அதிக சத்துக்கள் உள்ளது. இது உடலில் உள்ள மற்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சி உடலில் தைராய்டு ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்குமாம்.
4- நட்ஸ்:-
“செலினியம் என்பது தைராய்டு ஹார்மோன்களின் வளர்சிதை மாற்றத்திற்கு உடலுக்குத் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்து ஆகும். T4 ஐ T3 ஆக மாற்றுவதற்கு செலினியம் தேவைப்படுகிறது மற்றும் உலர் நட்ஸ் இந்த ஊட்டச்சத்தின் சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாகும். உண்மையில், இந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் தைராய்டு தாதுக்களின் ஆரோக்கியமான அளவை உங்களுக்கு வழங்க ஒரு நாளைக்கு மூன்று நட்ஸ் போதுமானது.
5- பீன்ஸ்:-
பீன்ஸில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன . “அவற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது தைராய்டு சமநிலையின்மையின் பொதுவான பக்க அறிகுறியான மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டால் பாதுகாக்குமாம்.