ஆரோக்கியம்செய்திகள்மருத்துவம்வாழ்வியல்

வாயை சுத்தமாக வைத்துக்கொள்ள…சில டிப்ஸ்..

ஆயில் புல்லிங்:

காலையில் எழுதவுடன் வாயில் நல்லெண்ணெய் வைத்து சிறுதி நேரம் கழித்து கொப்புள்ளிப்பது தான் ஆயில் புல்லிங் எனப்படுகிறது. தினமும் இவ்வாறு செய்யும் போது வாயில் உள்ள நச்சு பாக்டிரியாக்கள் அழிக்கப்படுகிறது. மேலும் வாயில் ஏற்படும் புண் போன்றவற்றை இது தடுக்கிறது. தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்யும் போது நீங்கள் புத்துணர்சியுடன் இருப்பீர்கள்.

வேம்பு:-

கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு, ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று, அந்தளவுக்கு வேம்பில் வாயில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் உள்ளது. மேலும் இயற்கையானவை என்பதால் உங்களுக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

நாக்கை சுத்தப்படுத்துதல்:-

தினமும் பல் துலக்கி முடித்தவுடன் டங் கிளினரை வைத்து உங்கள் நாக்கை சுத்தப்படுத்திக்கொள்வது மிக நல்லது. iவ்வாறூ செய்வதன் மூலம், வாயில் ஏற்படும் தூர்நாற்றத்தை தவிர்க்கலாம். மேலும் நச்சு பாக்டீரியாவின் வளர்சியை தடுக்கலாம்.

ஹெர்பல் கொண்டு வாயை சுத்தப்படுத்துதல்:

திரிபலா கஷாயம் கொண்டு வாயை சுத்தப்படுத்துவது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதால் வாயில் ஏற்படும் புண்களை தடுக்கலாம்.

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்:-

தினமும் காலை, இரவு என இரண்டு முறை பல்துலக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சாக்லேட் போன்ற ஒட்டும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு முறையும் துலக்குவது முக்கியம். ஒரு நாளைக்கு 4-5 முறை பல் துலக்குவது சாத்தியமற்றது என்பதால், அதை இரண்டு முறையாவது துலக்குவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *