ஃபேசன்ஆரோக்கியம்சுற்றுலாசெய்திகள்வாழ்க்கை முறை

ஜான்வி கபூரின் பிட்னஸ் ரகசியங்கள்…!

ஜான்வி கபூர் சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், நீங்கள் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்தால், அவரது ஹாட்டான ஜிம் புகைப்படங்களை, புதுமையான ஆடைகளில் பார்ப்பதை நீங்கள் தவறவிட மாட்டீர்கள். நடிகை ஜான்வி கபூர் தனது பிட்னஸ் குறித்த ரகசியங்களை தெரிவித்துள்ளார்.

1- தினமும் புதுமையான உடற்பயிற்சியை செய்தல்

நீங்கள் தினமும் ஒரே மாதிரியான உடற்பயிற்சியை செய்வது உங்களுக்கு சலிப்பை ஏற்ப்படுத்தும், அதனால் நீங்கள் தினமும், நடனம் நீச்சல் அல்லது டென்னிஸ், பூப்பந்து போன்ற விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதனை , நண்பர்களுடன் விளையடலாம்.

2- நீங்கள் வலிமையாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்..

தினமும் சீரானா முறையில் உடற்பயிற்சி செய்வது உங்களை வலுப்படுத்தும் என்கிறார் ஜான்வி கபூர். உடற்பயிற்சிகளில் முக்கியமானது உங்கள் இடுப்பு, கீழ் முதுகு, இடுப்பு மற்றும் அடிவயிற்றில் உள்ள தசைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமாம்.

3- நாண்பர்களுடன் உடற்பயிற்சி

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம், அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு புத்துணர்சி ஏற்படும். நீங்கள் அவரை ஊக்குவிப்பதன் மூலம் உங்களுடைய மானப்பான்மை மேலோங்கும் என்றும், வலிமையானவராக உணரப்படுவீர்கள். மேலும் நண்பருடன் உடற்பயிற்சி செய்யும் போது ஆர்வமாகவும், வேடிக்கையாகவும் இருப்பீர்கள்.

பயணத்தின் போது உடற்பயிற்சி செய்ய தேவையான பொருட்களை எடுத்து செல்லுங்கள்

ஜான்வி கபூர் பயணம் செய்யும் போது கூட உடற்பயிற்சி செய்ய தேவையான பொருட்களை எடுத்து செல்வராம். தினமும் யோக செய்வதை அவர் உறுதிப்படுத்துகிறார்.

5- பிறரை பொறமை பட வையுங்கள்..

நம்ம ஊரில் ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழி உண்டு, அதேபோல் நீங்கள் மந்தமாக உணரும் போது, சில ஓர்க் அவுட் ஆடைகளை அணிந்து உங்களை நீங்களே உற்சாக மூட்டிக்கொள்ளலாம். பின்னர் அந்த ஆடைகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பிறரை பொறமை படுத்தலாம் என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *