62 வயது பெண்மணி கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
62 வயது பெண்மணி கொரோனா தொற்று காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட கடியா பட்டியை சேர்ந்த 62 வயது பெண்மணி ஒருவர் இன்று சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார்.
அம்மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த பெண்மணியின் கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியானது.
கொரோனா தொற்று திருச்சி மாவட்டத்திற்கு சென்று வந்தபோது ஏற்பட்டதாகவும், அதன் பிறகு தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாகவும் கூறப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்று வரை மாவட்டம் முழுவதும் 252 பேர் கொரோனாவால் பாதித்து உள்ளனர்.
79 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும். மீதமுள்ள 169 பேர் ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியிட்டனர்.
மேலும் நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது 62 வயது பெண்மணியும் சேர்த்து 5 ஆக இறப்பு அதிகரித்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிமாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உரிய அனுமதி இன்றி வரும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இ- பாஸ் பெற்று வரும் நபர்களையும், உரிய மருத்துவ பரிசோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.