ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் காணும் பொங்கல்

தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் காணும் பொங்கல். கன்னிப் பொங்கல், கணு பொங்கல் என்று காணும் பொங்கலை அழைப்பார்கள். இப்பொங்கல் நாளன்று பட்டி மன்றம், வழுக்குமரம் ஏறுதல், ஜல்லிக்கட்டு, உறியடித்தல் போன்ற வீர சாகச விளையாட்டு போட்டிகள் முக்கிய இடம் பெறுபவை.

பானையில் மஞ்சள் கொத்து கட்டி அவற்றை தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று வாங்கி கல்லில் இழைத்து முகம் மற்றும் பாதத்தில் பூசிக் கொள்வார்கள் பெண்கள். கன்னிப் பொங்கல் பொதுவாக கல்யாணம் ஆகாத ஆணுக்கும், பெண்ணுக்கும் உரியது. கல்யாணம் ஆகாத இளம் பெண்கள் வெள்ளை துணியால் மூடப்பட்ட தாம்பூலத்தை மாலை நேரத்தில் எடுத்துக்கொண்டு ஓரிடத்தில் ஒன்று கூடுவார்கள்.

கரும்புத் துண்டு, கல்கண்டு, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் போன்றவை ஒவ்வொருவருடைய தாம்பூலத்திலும் இருக்கும். ஆற்றங்கரை வரை கும்மி அடித்தபடியே பாடல்களைப் பாடிக்கொண்டு ஊரில் ஒன்று கூடிய பெண்கள் அனைவரும் ஒன்றாக சென்று, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து திருமணம் நடக்க வேண்டிக் கொள்வார்கள். ஏரி, குளம் மற்றும் ஆற்றங்கரைகளில் ஏதாவது ஒன்றை நோக்கி சென்று வழிபடுவார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கி தங்கள் வீரத்தை ஆண்மகன்கள் வெளிப்படுத்துவார்கள். தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின் சிறப்பு. காளையை கன்று என்று கூறுவதால் கன்றுப் பொங்கல் என அழைக்கின்றனர்.

உடன் பிறந்த சகோதரர்கள் வளமாய் வாழ சகோதரிகள் செய்யும் நோன்பு கனுப்பிடி பொங்கல் என்பது இந்த நாளில் சிறப்பு. இரண்டு வாழை இலைகளை கிழக்குமுகமாக ஆற்றங்கரையில் அல்லது வீட்டு மொட்டைமாடியில் கோலமிட்டு அதன்மீது இலையை வைக்க வேண்டும். முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள் பொடி தூவி மஞ்சள் சாதம் கொஞ்சமும், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சமும், வெள்ளை பால்சாதம் கொஞ்சமும், வெல்லம் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் கொஞ்சம். தயிர் சேர்த்து தயிர் சாதம் கொஞ்சம் என ஐந்து வகை அண்ணன்களை தயாரித்து வைப்பார்கள்.

மேலும் படிக்க : அவல் சர்க்கரை பொங்கல்

ஒவ்வொரு தட்டிலும் ஐந்து அல்லது ஏழு பிடி உருண்டைகளாக உருட்டி வரிசையாக வைக்கும் போது காக்கா பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம். கூடப் பிறந்த சகோதரர்கள் என்னாலும் குறைவில்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே வைப்பார்கள். பிறகு அவற்றிற்கு தீபமேற்றி ஆரத்தி காட்டி ஆற்றில் கரைத்து விடுவார்கள். இந்த நாளில் உடன் பிறந்தவர்களை அழைத்து விருந்து கொடுத்து அன்பளிப்பை பரிமாறிக் கொள்வார்கள். குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக கூடி கொண்டாடும் பண்டிகையே காணும் பொங்கல்.

மேலும் படிக்க : ஃபேஷன் சுடிதார் ரகங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *