10 ஆண்டுகளில் 38 வீரர்கள் வீர மரணம்…சத்தீஸ்கரில் என்ன நடக்கிறது..?
சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 பிஎஸ்எஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர்-ஒடிசாவின் பிஎஸ்எஃப் கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏடிஜி) ராஜ்விந்தர் சிங் பாட்டி, கடந்த பத்தாண்டுகளில் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் நக்சல்களுக்கு எதிரான போரில் 38 பிஎஸ்எஃப் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்றார்.
மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் 18 கிளர்ச்சியாளர்களைக் கொன்றுள்ளதாகவும், கிட்டத்தட்ட 1,650 பேரைக் கைது செய்துள்ளனர். 1,473 ஆயுதங்கள் , 3,176 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு மட்டும் 14 கிளர்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 91 மொபைல் போன்களை டவர்களை நிறுவுவதற்கு BSF பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.