Jallikattu bulls

மூளியான கொடியவளும்,

உதாசனி … அவமதிக்கத் தக்கவளும்,

மூர்க்க குலத்தி … மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில்
பிறந்தவளும்,

விபீஷணர் சோதரி … விபீஷணருக்கு சகோதரியும்,

முழுமோடி … முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை,

மூத்த அரக்கன் இராவணனோடு … அண்ணனும்
அரக்கனுமான ராவணனிடம் சென்று

இயல்பேற்றிவிட … சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில்
புகுத்திவிட,

கமலாலய சீதையை … தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய
சீதாதேவியை

மோட்டன் வளைத்து … மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக்
கவர்ந்து

ஒரு தேர்மிசையே கொடு முகிலேபோய் … ஒற்றைத் தேரிலே
வைத்து மேகமண்டலம் சென்று,

மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டில் … பிரசித்தி பெற்ற,
அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்

இருத்திய நாள் … (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது,

அவன் வேரற … அந்த ராவணனின் வம்சமே வேரோடு
அற்றுப்போகும்படி,

மார்க்க முடித்த … அதற்குரிய வழியை நிறைவேற்றிய

விலாளிகள் நாயகன் மருகோனே … வில்லாதி வீரர்களின்
தலைவனாம் ராமனின் மருமகனே,

வாச்சிய மத்தள பேரிகை போல் … வாத்தியங்களான மத்தளம்,
பேரிகை இவற்றின் ஓசை போல

மறை வாழ்த்த … வேதியரின் வேத கோஷங்கள் வாழ்த்தவும்,

மலர்க்கழு நீர்தரு … செங்கழுநீர் மலரை நாள்தோறும் தருகின்ற

நீள்சுனை வாய்த்த … நீண்ட சுனை வாய்க்கப் பெற்ற

திருத்தணி மாமலை மேவிய பெருமாளே. … திருத்தணிகை
என்னும் பெருமலையில் மேவிய பெருமாளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *