மதுரித இந்தள அம்ருத வசனமும் முறுவலும் … இனிமையான
யாழ் போன்றதும் அமிர்தம் போன்றதுமான வசனத்தையும்,
இளநகையையும்,
அபிராம இந்த்ர கோபமும் … வசீகரிக்கும் (இந்த்ரகோபம் என்ற
சிவந்த பூச்சி போன்ற) சிவப்பான அதரங்களையும்,
மரகத வடிவமும் … மரகதப் பச்சை வடிவத்தையும்,
இந்த்ர சாபமும் … வானவில் போன்ற புருவங்களையும்,
இருகுழை யொடுபொரும் இந்த்ர நீலமும் … இரு
குண்டலங்களோடு போர்புரிவது போல காதுவரை நீண்ட கண்களின்
நீலமணிகளையும்,
மடலிடை யெழுதிய பெருமாளே. … மடல் ஏட்டில்** எழுதி
வர்ணித்த பெருமாளே.
