ஆரோக்கியம்உளவியல்வாழ்க்கை முறைவாழ்வியல்விழிப்புணர்வு

மனதுக்கு புத்தர் கூறும் 3 அறிவுரை

சித்தார்த்தர்

பல அறிஞர்கள் மன ஆராய்ச்சியில் இன்றளவும் ஈடுபட்டால்கூட, மனதை பற்றிய தெளிவான புரிதல்களை இந்த உலகிற்கு வாரி வளங்கியதில் பெரும் பங்கு கௌதம புத்தரைச் சேரும். அப்படி என்ன தனித்துவம் வாய்ந்த தத்துவங்களை அவர் பறைசாற்றினார் என்பதை பற்றிதான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

புத்தர் மற்றும் பிற அறிஞர்களின் வேறுபாடு

மனதை பற்றி பகுத்தறிவாளர்கள் மற்றும் விஞ்சானிகள் பல கருத்துக்களையும், கண்டுபிடிப்புகளையும் கொடுத்திருந்தாலும், மனதை பற்றிய ஆளமான மற்றும் ஆணி வேரான காரணிகளை கண்டுபிடித்து அறிவியல் பூர்வமாக நிரூபித்து அதை நடைமுறைக்கு கொண்டு வந்த பெருமை புத்தருக்கே சேரும்

மனம் சாரந்த சவால்களை சமாளிக்க முடியுமா

நவீன உலகில் உடல் குறைபாட்டை ஒரு சார மக்கள் சந்தித்துக்கொண்டு இருக்க மற்றொரு சார பிரிவினர், ‘மனம்’ சார்ந்த குழப்பங்களுக்கும், மனம் சார்ந்த அல்லல்களுக்கும் ஆளாகின்றனர். அப்படிப்பட்ட அல்லல்களுள் சிக்கி சீரழியும் மனிதர்களுக்கு மனம் பற்றிய தெளிவான புரிதல்கள் ஏற்படுவதில்லை. இதுமோன்ற அல்லல்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை புத்தர் அவர் கோணத்தில் இருந்து மூன்று காரணிகளை முன்வைக்கிறார்.

வெறுப்பு

ஒரு முறை கிடைத்த மகிழ்ச்சி, இன்ப உணர்ச்சி மீண்டும் மீண்டும் எனக்கு கிடைக்க வேண்டும், அந்த மகிழ்ச்சி கிடைக்காததற்கான காரணங்களையும், சூழ்நிலைகளையும், அதற்கு சம்பந்தமான மனிதர்களையும் வெறுப்பதே முதல் காரணி. அந்த வெறுப்பு அவரவர் மீதே ஏற்படுவதும் உண்டு.

பற்று

தான் சம்பாத்த்த பணம், பொருட்கள், வீடு, துணை மற்றும் இலட்சியங்கள் மீது இணையற்ற பாசம் வைப்பதே பற்று. இதில்லாமல் என்னால் வாழ இயலாது என்று கூறிவிட்டாலே அது பற்றின் அடிப்படையில் வந்துவிடும். அந்த பற்று உணவின் மீதும் இருக்கலாம், வேலையின் மிதும் இருக்கலாம் உயிரற்ற பொருட்களின் மீதும் இருக்கலாம்.

அறியாமை

மேற்கண்ட இரண்டு காரணிகளுக்கும் மூலம் இதுவே. நம்மிடம் பற்று, வெறுப்பு இருக்கிறது என்பதை அறியாமல் இருப்பதே அறியாமை. இந்த மூன்று காரணிகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. தனித்தனியாக கண்டுபிடித்து அவற்றை தனித்தனியாக சரி செய்வது என்பது சற்று தாமதமான காரியமே. ஆனால் இந்த அறியாமை என்னும் மனத் துன்பத்தை விரட்டி அடித்துவிட்டால், மீதம் உள்ள இரண்டு காரணிகளும் தானாக விலகிக்கொள்ளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *