செய்திகள்விளையாட்டு

இந்தியா அடித்து நொறுக்கி பெற்ற வெற்றி பார்வை!

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற 2 ஆம் டெஸ்ட் வெற்றியை அலசி ஆராய்வோம் வாங்க. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி – முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பழித்தீர்த்தது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.

இந்திய அணியின் வெற்றி

ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியணி 2-1 என்ற கணக்கிலும் , டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும் வென்றது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்  இந்தியா அணியின் மோசமான செயல்பாடு காரணமாக மோசமாக தோற்றது. கேப்டன் கோஹ்லியும் சொந்த விஷயத்திற்காக தாயகம் திரும்பினார்.

டாஸ் வென்ற அணியின் ஆட்டம்

2 வது  போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்த அஜின்கியா ரஹானே நியமிக்கப்பட்டார். மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலியாவில் மாற்றம் இல்லை

ஆஸ்திரேலிய அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை. இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டது. 1) ப்ரித்வி ஷாவிற்கு  பதிலாக சுபமான் கில்  2) வ்ரிதிமண் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட்  3) விராட் கோஹ்லிக்கு பதிலாக ஜடேஜா மற்றும் 4)ஷமிக்கு பதிலாக சிராஜ்  சேர்க்கப்பட்டனர்.

முதல் இன்னிங்ஸ்சில் முடிந்த ஆஸ்திரேலியா

இதில் சுபமான் கில் மற்றும் மொஹம்மது சிராஜ்ற்கு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய  பந்துவீச்சாளர்கள் மிகுந்த நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

தாறுமாறு இந்தியா அணி தக்காளி சோறு

ஆஸ்திரேலிய  அணியில் லபுஸ்சாகினே அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில்  பும்ரா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் , அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட்களையும் மற்றும் ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்திய அணிக்கு நெருக்கடி

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களும் கடும் நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணியில் கேப்டன் ரஹானே சத்தம் விளாச (112 ரங்கள்), ஜடேஜா 57 ரன்கள் சேர்க்க, அறிமுக வீரர் சுபமான் கில் 45 ரன்கள் சேர்க்க முதல் இன்னிங்சில் இந்திய அணி 326 சேர்த்து. 

அடுத்து அசத்திய இந்திய அணி

இதனால் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் லயன் மற்றும் ஸ்டார்க் தலா 3 விக்கெட்களையும், கம்மின்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.  அடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய  அணிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் மீண்டும் நெருக்கடி கொடுத்தனர்.

ஆஸ்திரேலியா- இந்தியா

இதனால் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 45 ரன்களும், வாடே 40 ரன்களும், லபுஸ்சாகினே 28 ரன்களும் சேர்த்தனர். இந்திய தரப்பில்  சிராஜ்  3 விக்கெட்களை, ஜடேஜா, பும்ரா மற்றும் அஸ்வின்  தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

  ரஹானே இந்திய அணிக்கு

70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணிக்கு  ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ்  நெருக்கடி கொடுத்தனர். கில் (35 ரன்கள் *) மற்றும் ரஹானே (27 ரன்கள் *) இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

2ஆம் டெஸ்டில் இரண்டாம் டெஸ்ட்

இதனால் இந்திய அணி 70 ரங்களுக்கு  2 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை அஜின்கியா ரஹானே வென்றார்.  பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல் போட்டியில் பெற்ற மோசமான தோல்வியில் இருந்து மீண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *