பெங்களூரில் மீண்டும் ஊரடங்கு வராது என்கிறார் எடியூரப்பா!
கொரனோ பெரிய சிக்கலாக நாட்டை பெருமளவில் பாதித்து வருகின்றது. ஆனால் இதை தடுக்க வேண்டும் என்று கவனம் செலுத்தும் அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றைத் தடுக்க வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதுபோல் பொருளாதாரத்தையும் நாம் காக்க வேண்டும் இல்லையெனில் பஞ்சம் நிச்சயமாக ஏற்படும் என்பதில் கர்நாடக முதலமைச்சர் சற்று கவனமாக இருக்கின்றார்.
பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் கொடுத்த பேட்டியின்போது பெங்களூரு மீண்டும் சந்திக்காது பெங்களூர் பாதுகாப்பாக உள்ளது. இன்று பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வார்டுகள் அனைத்திலும் பலமான நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
நேர்மையான முறையில் அனைத்து நடவடிக்கைகளும் செய்து தரப்படுகின்றன நாட்டிலேயே பெங்களூரு கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக செய்து வருகின்றது என்று எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் பெங்களூருவில் பாதிப்புகள் அதிகரித்து காணப்பட்டு வருக்கின்றன. இதனை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றோம் நிச்சயம் ஒரு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும், என்பதே எங்களது குறிக்கோளாக இருக்கின்றது.
எடியூரப்பா அவர்கள் தெரிவித்த கருத்தில் நாம் தெரிந்துகொள்ள முடிகின்றது உண்மையில் பெங்களூருவில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவை கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
மக்களுக்கு விழிப்புணர்வு என்பது அதிகரித்துக் காணப்படுகின்றது. அதே நேரத்தில் குப்பைகள் வாங்குவது, துப்புரவு பணிகள் செய்வது ஆகியவற்றில் பெங்களூரு இன்னும் கவனம் செலுத்துகின்றது. பெங்களுருவில் தீவிர கடைகளில் வியாபாரிகள் கையாளுகின்றனர்.
பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு வராது என்று அவர் கூறினார். கொரோனா தொற்று அதிகரிக்கும்போது இதன் சிக்கல் மீண்டும் அதிகமாகும் .ஆதலால் நோய்த்தொற்றை குறைத்து பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டிய பொறுப்புடன் அரசு இருக்கின்றது .