என்னம்மா இப்படி பண்றீங்களேமா சீனாவில் மீண்டும் ஊரடங்கு
சீனாவில் இரண்டாவது முறையாக லாக் டவுன் அமுலுக்கு வருகின்றது. சீனாவில் பீஜிங் மாகானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு 56 வயது மிக்க நபர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானது.
இதனை அடுத்து பீஜிங்கில் அடுத்தடுத்த டெஸ்ட்களெல்லாம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சீனா அடுத்த ஒரு ஊரடங்கு அறிவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சீனாவின் இந்த அறிவிப்பை யொட்டி உலக நாடுகளுக்கு பீதி கிளம்பியுள்ளது. என்னமா இப்படி பன்றீங்களேமா என்றபடி கேள்விகள் கிளம்பியுள்ளன.
பீஜிங்கில் கொரானா:
சீனாவின் பீஜிங் நகரத்தில் கொரனாவின் தாக்கம் இருப்பதால் அடுத்த ஊரடங்கு தொடர்ந்து செல்லும் என்பது தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நகரத்தில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உள்ளூரை சேர்ந்தவர், எப்படி அந்த தொற்று பரவியது என்று தெரியாமல் அரசு தள்ளாடி வருகின்றது. இதனால் சீனாவில் மீண்டும் ஊரடங்கு அறிவித்துள்ளது.
இந்த பாதிப்பு எப்படி மீண்டும் ஆரம்பம் ஆனது என்பதை முழுமையாக ஆய்வு செய்ய சீனா தயாராகி வருகின்றது. பீஜிங்கில் புதிதாக கோவித்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு பேரும் சீனா இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பீஜிங்கில் இரண்டு நாளும் மூன்று பேருக்கு கொரானா தொற்று உறுதியாக இருப்பது அந்த நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சீனாவில் மீண்டும் ஊரடங்கு:
சீனா மீண்டும் ஊரடங்கு நடவடிக்கையில் களத்தில் இறங்கியுள்ளது சுமார் ஐந்து மாதத்திற்கு பின்பு தற்போது தான் சீனா கொரானா கட்டுக்குள் வந்துவிட்டது என்றும் ஊரடங்கு விளக்கப்பட்டு சீன மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் சீனாவின் இந்த அறிவிப்பிற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக தற்பொழுது கொரானா தொற்று என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பீஜிங்கில் பாதிக்கப்பட்ட நபர்கள் இருவரும் எந்த நகரத்திற்கும் செல்லவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் சீனா டெஸ்ட் தொடங்கியுள்ளது. சில பகுதிகளில் ஊரடங்கு அமல் படுத்த உள்ளதுடன் பள்ளிகள் அனைத்தையும் மூட அறிவித்துள்ளது என்ன சார் நீங்க இப்படி பண்ணுறீங்க என்பது போல் இருக்கின்றது.
இரண்டாம் கட்ட சீன ஊரடங்கு நடவடிக்கைகள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கையை நமக்கு கொடுத்துள்ளது. இதுபோல் இந்தியாவில் இன்னும் முதற்கட்ட ஊரடங்கு இன்னும் முழுமையாக தளரவில்லை ஆனால் பாதிப்பு எண்ணிக்கைகள் பலமடங்கு பெருகி கொண்டிருக்கின்றது தற்போது சீனாவின் இந்த ஊரடங்கு இந்தியாவை மேலும் வருத்ததில் ஆழ்த்தியுள்ளது என்ன இருந்தாலும் உயிர் பிரச்சனை ஆச்சே, சீனாவைப் போன்று அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா ஆகையால் நம்மை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்ற எண்ணமும் அனைவரையும் ஆட்டிப் படைக்கின்றது.