டெக்னாலஜி

25வது ஆண்டை கொண்டாடும் டுகாட்டியின் புதிய ரக 500 பைக்

டுகாட்டி இளைஞர்களின் கனவு பைக்குகளில் ஒன்றாகவுள்ளது, டுகாட்டி எங்கு பறந்தாலும் அதனை ஓரக்கண்ணில் பார்க்காத இளைஞர்களே இல்லை என கூறலாம்.

டுகாட்டி நிறுவனம் ஸ்பெஷல் லிமிடெட் எடிசனாக பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக் வகையில் 500 பைக்குகளை மட்டுமே தயாரித்து உலகளவில் விற்பனை செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். லிமிடெட் எடிசன் பைக்குகள் இந்தியவில் ஸ்பெஷல் ஆர்டர்களின் பெயரில் வரும் அக்டோபர் மாதம் முதல் 54.9 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனைக்கு வர உள்ளது.

ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் டுகாட்டி 916 பைக்குகளின் 25-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்வைத்து அதிக அழகு கொண்ட சூப்பர் பைக்குகள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு மொத்தமாக 500 பைக்குகள் மட்டுமே உலகளவில் விற்பனைக்கு வர உள்ளது. 

டுகாட்டி 916 பைக்குகள் மிகவும் சிறந்த மோட்டார் சைக்கிள்கள் போர்கோ பனிகலே தொழிற்சாலை மற்றும் மறுசீரமைப்பு டிசைன்களுடன் அதிக திறன்களுடன் இருக்கும். எங்கள் நிறுவனத்தின் பாரம்பாரியத்தையும் 25-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டுகாட்டி இந்தியா மேனேஜிங் டைரக்டர் செர்கி கனோவாஸ் தெரிவிக்கையில், டுகாட்டி பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த பைக்குகள், பைக் ரைடை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, ஏற்ற வகையில் இருப்பதுடன் தனித்துவம் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

டுகாட்டி பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக்குகள், ரேஸிங் வகைகளுக்காகவும், பனிகலே வி 4ஆர் குடும்பத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்புற பிரேம், டிசைன்களுடன் டுகாட்டி கோர்ஸ் ஸ்பெசிபிகேஷன்களுடன் இருக்கும்.

டுகாட்டி இந்தியா மேனேஜிங் டைரக்டர் செர்கி கனோவாஸ் தெரிவிக்கையில், டுகாட்டி பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த பைக்குகள், பைக் ரைடை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, ஏற்ற வகையில் இருப்பதுடன் தனித்துவம் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

டுகாட்டி பனிகலே வி 4 25 அனிவர்சாரியோ 916 பைக்குகள், ரேஸிங் வகைகளுக்காகவும், பனிகலே வி 4ஆர் குடும்பத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்புற பிரேம், டிசைன்களுடன் டுகாட்டி கோர்ஸ் ஸ்பெசிபிகேஷன்களுடன் இருக்கும்.

டுகாட்டி 916 பைக்குகளை அறிமுகம் செய்வது அருமையாகவும், மறக்க முடியாத வகையிலும் இருந்தது.  மோட்டார் சைக்கிள்கள் வழக்கமான ஸ்டைல் மற்றும் திறன்களுடன் இருக்கும். இந்த பைக்குகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததில் பெருமை அடைகின்றது. இதுமட்டுமின்றி 25 ஆண்டு நிறைவு விழா கொண்டாட புதிய பைக்குகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி அடைய செய்கிறது என்றார்.

ஒரிஜினல் டுகாட்டி 916 பைக்குகள் டுகாட்டி நிறுவனத்தால் 1994 முதல் 1998ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டது. இவை 916 cc, எரிபொருள் இன்ஜெக்டாட், 90 டிகிரி டுவின் இன்ஜின்களுடன் டிரை கிளட்ச்சும் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம் ஆகும்.  டுகாட்டி இன்ஜின்கள் 114 bhp ஆற்றலில் 9,000 rpm-லும், 90 Nm பீக் டார்க்கில் 6,900 rpm-லும் இயங்கும். பாரம்பரிய மோட்டார் சைக்கிள் டிசைனர் மாசிமோ தம்புரினி தயாரித்த டுகாட்டி 916 அதிக அழகுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *