Michung cyclone impact : மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை மக்களுக்கு கோவையில் ரூ.20 லட்சம் மதிப்பில் நிதியுதவி
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், கோவையை சேர்ந்த,தேன்கூடு என்ற அமைப்பின் சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது
தமிழகத்தின் தலைநகர் என்றழைக்கப்படும் சென்னையில், ‘மிக்ஜாம்’ என்ற புயலின் கோரதாண்டவத்தால் சென்னை மட்டுமின்றி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது, குறிப்பாக, சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல லட்சம் மக்கள் கடந்த மூன்று நாட்களாக பெரியளவில் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர், அவர்களுக்குத் தேவையான அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
புயல் பாதிப்பிற்குள்ளாகி உள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்டம், ஒன்னிபாளையம் பகுதியில் உள்ள, எல்லை கருப்பராயன் கோவில் நிர்வாகம், பக்தர்கள் மற்றும் தேன்கூடு தன்னார்வ அமைப்பின் சார்பில் 20லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது, 5 கிலோ அரிசி பைகள் 25 கிலோ மூட்டைகள்,50 கிலோ மூட்டைகள் என மொத்தம் 22 டன் அரிசி மூட்டைகள், 4000 கிலோ சாப்பாட்டு உப்பு பாக்கெட்கள், 50 ஆயிரம் நாப்கின் பாக்கெட்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை கோவை கணியூர் அடுத்த, கருமத்தம்பட்டியிலிருந்து, லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தேன்கூடு தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்
மு .லோகநாதன் நிவாரண பொருட்கள் லாரிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.