செய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீஸ் குவிப்பு; கண்காணிப்பு பணிகள் தீவிரம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. பண்டிகைக்காக அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் பண்டிகை நாட்களில் புத்தாடை அணிவதற்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஜவுளி எடுப்பதற்காக ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் ஏதோ சந்தை கடை போல் உள்ளது. வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வரும்போது ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே முக்கியமான இடங்களில் உள்ளே கூட செல்ல முடியாமல் கூட்ட நெரிசல் உள்ளது.

அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு மக்கள் கூட்டம் உள்ளது. எனவே அவர்களின் பாதுகாப்பிற்க்காக சென்னையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு முறையில் 18,000 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. புத்தாடைகள் வாங்குவதற்கும், வெளியூர் செல்வதற்காகவும்,பட்டாசு மற்றும் பலகாரங்கள் வாங்கவும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் கூடுவதால் இந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய பகுதிகளான தி நகர் புரசைவாக்கம், பாண்டி பஜார், மயிலாப்பூர், பூக்கடை, கோயம்பேடு ,வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு போடப்பட்டுள்ளது. 5 காவல் கட்டுப்பாட்டு அறை, 10 தற்காலிக உதவி எங்கள் அமைத்து சுழற்சி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தி நகர் உட்பட முக்கியமான 17 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் கண்காணிப்பு பணிகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

எனவே சென்னை மக்கள் அச்சமின்றி பாதுகாப்பான முறையில் தங்களது தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கு செல்லலாம். இந்த வருட தீபாவளி பண்டிகையை போலீஸ் பாதுகாப்போடு சரியாக கொண்டாடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *