இந்திய ராணுவத்திற்கு 175 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கொடுத்த நடிகர் சுமன்!
சினிமாத் துறையில் பல கோடி சம்பாதித்து பெயரோடு புகழோடும் வாழ்ந்தால் போதும் என்றிராமல் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.
இந்திய ராணுவத்தின் பாதுகாப்புத் துறை
அந்த வகையில் தமிழ், தெலுங்கு போன்ற பல படங்களில் நடித்த நடிகர் சுமன் அவர்கள் ஹைதிராபாத்திலுள்ள தான் சம்பாதித்த நிலங்களானகிட்டத்தட்ட 175 ஏக்கர் நிலத்தினை இந்திய ராணுவத்தின் பாதுகாப்புத் துறைக்கு வழங்கியுள்ளார்.
கார்கிலில் பாதிக்கப்பட்டோர்க்காக அந்த நிலங்கள் சேர வேண்டும் எனவும் பதிவு செய்துள்ளார். முதலில் மல்டி காம்பிளக்ஸ் போன்ற வணிக நோக்கத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தை பிறந்தோம் வளர்ந்தோம், நடித்தோம் சம்பாதித்தோம் என்றில்லாமல் நாமும் எதையாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும் என தனது மனைவியுடன் கலந்துறையாடி செய்துள்ளார்.
இதனை ஒரு படவிழாவில் அறிவித்த சுமன் தன்னுடைய மனைவியின் அறிவுறுத்தலின் பேரில் இதனை செய்தார் என்பதையும் தெரிவித்தார்,
நாட்டின் உண்மையான ஹீரோக்கள் எந்த வித பலனும் எதிர்ப்பாரத ராணுவ வீரர்கள் என்பதை தெரிவித்த சுமன் வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையாக நாம் இருக்க வேண்டும்.
உலகத்தில் எந்த நாடுகளுக்கும் இல்லாத சிறப்புத்தன்மை, ஒற்றுமை நமக்குள்ளது அதனை நாம் சிறப்பாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என அறிவித்தார்.
அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும்
நாம் செய்யும் பணி எதுவாக இருந்தாலும் நமக்காக உழைப்போரை என்றும் மறத்தல் கூடாது. அவரவர்களுக்கான அங்கிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதனை நினைவுப் படுத்துகின்றது நடிகர் சுமனின் செயல்.
இவரைப் போல் செயல்படுவோம் சினிமாவில் இருந்து எதை எதையோ சினிமாவில் கற்கின்றோம் இதனையும் கற்றுக் கொள்வோம்.
அவர் நினைத்திருந்தால் பேருக்கு 10 ஏக்கர், 20 ஏக்கரோடு நிறுத்தியிருக்கலாம் ஆனால் 175 ஏக்கர் என்பது பெரிய உதவியாகும்.
அரசை எதிர்ப்பார்த்து காத்திருந்து உதவி செய்வதைவிட நாமே முன்னின்று ஒவ்வொருவரும் ஒரு ரூபாய் வீதம் பாதுகாப்புத் துறைக்கு கொடுத்தால் கூட சிறப்பானதாக இருக்கும் என்று நடிகர் சுமன் தெரிவித்தார்.