17 ஆண்டுகளை கடந்து சினிமாவை தொடரும் ஜெயம் ரவி
ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் என்று சொல்லலாம். இவர் அறிமுகமானது தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகள் கடந்து விட்டது. ஜெயம்ரவி அறிமுகமான படத்தின் பெயர் ஜெயம் இது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிட்டது ஆகும்.
ஜெயம் ரவி தனது முதல் படத்தில் அண்ணன் ராஜா இயக்க மற்றும் அவரது தந்தை மோகன் தான் படத்தை தயாரித்திருக்கிறார். ஜெயம்ரவியின் குடும்பம் ஆந்திராவில் இருந்து இருக்கிறது ஆனால் ஜெயம் ரவியின் அப்பா மோகன் அவர்கள் மதுரையில் பிறந்த தமிழ் நாட்டவர் மேலும் அவர் முதலில் தமிழ் படம் தயாரித்திருக்கிறார். பிறகுதான் தெலுங்குக்கு சென்றுள்ளார் அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அங்கு பல படங்கள் தயாரித்து இருக்கின்றார். இந்த தகவல்கள் கிடைக்கின்றன, ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா அவர்களும் முதல் படத்தை இயக்கியுள்ளார்.
ஜெயம் ரவி தமிழில் முதலில் அறிமுகமாக விரும்பவே, ரவியின் அண்ணன் மோகனும் இயக்க ஒத்துக் கொண்டுள்ளார் அதன்படி இயக்கியுள்ளார். ரவியின் அண்ணன் இயக்குனர் தந்தை தயாரிப்பாளர் என்ற போதிலும் தனக்கென தனி தகுதிகள் இருக்க வேண்டும் என்று, மும்பையில் சினிமாவிற்கான நடிப்பு பயிற்சி மற்றும் தமிழ்நாட்டின் சண்டை பயிற்சியாளர்களுடன் தனிப்பயிற்சி ஆகியவை கற்றுள்ளார். ஜெயம்ரவி பரதநாட்டியம் கற்றதுடன், கராத்தே கற்று சிறப்பான தகுதி பெற்றுள்ளனர் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து தன்னை நிரூபிக்க விரும்பாததால் தன் சொந்த காலில் தனது சொந்த குரலில் சொந்தத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்று களமிறங்கியுள்ளார்.
மேலும் சினிமாவை தனது தொழிலாக நினைத்து அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதாக ஜெயம் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார் ஜெயம் ரவியின் படம் என்றாலே அதில் ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கின்றது. புதுப்புது முயற்சிகள் எடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை ஜெயம் ரவி வைத்திருக்கின்றார் என்பது இதன்மூலம் புரிகின்றது