ஆன்மிகம்ஆலோசனை

16 வகை செல்வங்கள் தரும் அற்புத திருவோண விரதம்

சோபகிருது ஆண்டில் மாசி மாதம் 24 ஆம் தேதி திருவோண விரதம் கடைபிடிக்கப்படுகின்றது .

திருவோண விரதம் பெண்களால் வீட்டில் உள்ள ஆண்களின் நலன் கருதி கடைபிடிக்கப்படும் விரதமாகும்.

திருமாலின் பத்து அவதாரங்களில் வாமனா அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் தான் வரும் இந்த திருவோண விரதத்தில் பெண்கள் முக்கியமாக பங்கேற்பார்கள் பெருமாள் ஒப்பிலியப்பன் கோவிலில் திருவோண நட்சத்திர தினம் விழா கோலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

மாதம் தோறும் திருவோண விரதத்தினை வைணவர்கள் பின்பற்றி வருகின்றனர்

திருவோண விரதம் மகிமை

27 நட்சத்திரமான ராசி மண்டலத்தில் திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு உரியவனதாகும் சிவனுக்கு திருவாதிரை என்பது போல பெருமாளுக்கு திருவோணம் சொல்லப்படுகின்றது.

பெருமாள் மாமன் அவதாரம் தணிக்கையில் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருவோண நாள் மிகவும் சிறப்பு பெற்றது மகாபலி சக்கரவர்த்தியிடம் வாமனன் மூன்றடி மண் கேட்டதும் இந்த நாள் தான். அத்துடன் மார்க்கண்டேய மகரிஷியன் மகளாக பூமி பிராட்டி உப்பிலியப்பன் பெண் கேட்டு வந்ததும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான் இவ்வளவு சிறப்பு மிக்க இந்த நாளில் திருவோண விரதம் வழிபடுவது முக்கியமாக கருதப்படுகின்றது.

திருவோண விரதம் தரும் பயன்கள்

திருவோண விரதம் இருப்பவர்கள் வாழ்வில் வளங்கள் பல பெற்று பெருமாலுடன் இணைவார்கள் என்று ஐதீகம் இருக்கின்றது.

திருவோண விரதம் கடைபிடிக்கும் நாளில் விஷ்ணு புராணங்கள் படித்து வருவது சிறப்பு தரும். குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

திருவோண நாளில் நாள் முழுவதும் விரதம் இருந்து வீட்டின் நலன் மற்றும் சுபிட்சம் பெறுக பெண்கள் இதனை கடைபிடிப்பார்கள்.

திருமண நாளில் விரதம் இருப்பதால் வீட்டில் செல்வ கடாட்சம் அதிகரிக்கும் நல்ல திருப்பங்கள் நடைபெறும் மாதம் தோறும் பெண்கள் இதனை வீட்டில் பின்பற்றி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *