திருப்பதியில் பரவும் கொரோனா ஊரடங்கு அமல்!
திருப்பதியில் 15 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில் அதிகரித்து காணப்பட்டு வருகின்றன. ஏழுமலையான் சன்னதி அர்ச்சருக்கு இந்த நோய் தொற்று எனில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
திருப்பதியில் 15 அர்ச்சகர்கள் இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர். திருப்பதியில் மட்டும் 60 பேருக்கு மேல் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தலைமை அர்ச்சகர் ஒருத்தர் உயிருடன் இழந்திருக்கின்றார். ஏழுமலையான் கோவிலில் இருப்பவர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் கொரோனா அதிகரிக்கும் என்பதால் திருப்பதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைக்க வேண்டும்.
15 நாட்களுக்கு காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள் உணவகங்கள் திறந்து இருக்கலாம். என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் பால், மருந்து கடைகள் மட்டுமே திறந்திருக்க முடியும்.
அத்துடன் பொது மக்கள் வெளியில் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருப்பதிக்கு அருகில் இருக்கும் காளஹஸ்திக்கு ஏழு நாட்கள் முழு ஊரடங்கு இருக்கும் என்றும் மாவட்ட அரசுகள் முடிவு செய்துள்ளது.
இதன்படி திருப்பதிக்கு அடுத்த பதினைந்து நாட்கள் பக்தர்கள் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் சென்றாலும் இறை தரிசனம் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஊரடங்கு காரணமாக அனைத்தும் இயங்காது என்ற தகவல்கள் கிடைக்கின்றன.
இதுவரை நாட்டிலிருந்த பெரிய பெரிய நகரங்கள் இந்த வைரஸ் தாக்குதலினால் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தது. தற்போது சிறிய பெருநகரங்கள் அந்த லிஸ்டில் இணைந்துள்ளன.
கிராமங்கள் என்னவாகும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதற்குள் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.
இதுவும் கடந்து போகும் என்று எதைப்பற்றியும் அஞ்சாமல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து பணி செய்பவர்களும் உண்டு.