செய்திகள்விளையாட்டு

இந்திய கேப்டன் சென்னை கிங் வெற்றி விழா

14 செப்டம்பர் 2007 மகேந்திர சிங் தோனி இந்திய அணி கேப்டனாக அறிமுகமாகி உலக டி20 தொடரின் கோப்பையை கைப்பற்றினார். கேப்டனாக 13 வருட பயணத்தை கொண்டாடுகிறார் மகேந்திர சிங் தோனி.

இந்த நாள் உன் டைரில குறிச்சு வச்சுக்கோ! அப்டின்னு எல்லா நாட்டு அணியையும் எச்சரிக்கிறார் மாதிரி இந்திய அணி கேப்டன் மற்றும் நம்ம சூப்பர் கிங்ஸ் சிங்கம் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பையை வென்று கூறினார்.

திரையுலக கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை தன்னகத்தே உடையவர் தல மகேந்திர சிங் தோனி. பிரபல கதாநாயகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிஸ்ப்ளே பிக்சர் உருவாக்கி வந்த நெட்டிசன்கள் தற்போது இவரின் 13ஆவது வெற்றி வருடங்களை கொண்டாடும் வகையில் காமன் டிஸ்ப்ளே பிக்சர் உருவாக்கியுள்ளனர்.

இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி அனைத்து விதமான கோப்பையை கைப்பற்றியது பெரும் சாதனையாக போற்றப்படுகிறது. 2007 உலக டி20 கோப்பை, 2009 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை, 2011 உலக கோப்பை, 2013 உலக ஓடிஐ சம்பியன்ஷிப் கோப்பை, 2013 உலகச் சாம்பியன்ஷிப் ட்ராஃபி என கிரிக்கெட் துறையில் அனைத்து உலக கோப்பைகளை வெல்ல இந்திய அணிக்கு கேப்டனாக திகழ்ந்தார் மகேந்திர சிங் தோனி.

இந்திய அணியின் கேப்டனாக பல சாதனைகளை புரிந்ததோடு விக்கெட் கீப்பராக தனித்துவ பங்கினை கிரிக்கெட் விளையாட்டு துறையில் வகிக்கிறார். அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டிலும் மொத்தமாக 737 விளையாட்டு வீரர்களை ரன் அவுட் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் தல மகேந்திர சிங் தோனியை அடையும்.

கிரிக்கெட் விளையாட்டில் கேப்டனாக 331 போட்டிகளில் விளையாடியவர். வேறு எவரும் இத்தனை போட்டிகளில் கேப்டனாக விளையாடியதில்லை. இவரின் பேட்டிங் திறமையும் போற்றத்தக்கது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஆறுக்கு மேற்பட்ட எண்ணில் களமிறங்கும் இவர் ஓடிஐயில் 4061 ரன்களை குவித்து சாதனை பெற்றவர். இந்த அனைத்து சாதனையுமே உலக அளவில் ஒரு இந்தியனாக இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி பெற்றது.

இந்திய அணி வீரர்களுக்கு நடுவிலும் பல சாதனைகளை பெற்றுள்ளார் மகேந்திர சிங் தோனி. ஓடிஐ போட்டிகளில் 200 க்கும் மேற்பட்ட சிக்சரை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் கலெக்டராக இருந்தவர் ட்ராஃபி கலெக்டர் ஆக மாறிய பயணம் குறிப்பிடத்தக்கது.

இந்தியன் பிரீமியர் லீக் என்று சொல்லப்படும் ஐபிஎல் டி20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இந்த அணியை எல்லா வருடமும் அரையிறுதிக்கு அழைத்துச் செல்வதோடு 2010, 2011, 2018 ஆகிய வருடங்களில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலக போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாட இருக்கும் ஐபிஎல் டி20 2020 தொடரின் கோப்பையை வெல்வார் என்று ரசிகர்களிடையே பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பதிமூன்று வருட வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக அவரும் இந்த கோப்பையை வெல்கிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *