ஆன்மிகம்ஆலோசனை

108 திவ்ய தேசங்களில் 93வது அழகர் கோவில்!.

108 திவ்ய தேசங்களில் 93 வது அழகர் கோவில் குறிப்பிடதக்கது. நீங்க எப்ப மதுரை போனாலும் இதெல்லாம் மிஸ் பண்ணாதீங்க. மேலும் பரீட்சை விடுமுறை மாதத்தில எப்போ நேரம் இருக்கோ அப்ப குடும்பத்துடன் சித்திரை திருவிழா போய்  பாருங்க. அழகர் கோவிலின் மகிமை என்னனு பார்க்கலாமா.

சுந்தரராஜ பெருமாள் மார்க்கண்டேயருக்கு நித்திய விபூதியையும், அம்பரீஷ மகாராஜாவிற்கு முக்தியையும், அழித்த வரலாறு வாமன புராணத்தில், ஸ்ரீ விருஷப மகாத்மியம் எனும் தலபுராணத்தில், ஜனக மகாராஜாவிற்கு வாமதேவரால் உரைத்தது. ஆழ்வார்கள் மங்களாசாசனம், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகிய ஆறு ஆழ்வார்கள்.

அழகரையும் மற்றும் அழகர் மலை பற்றி 123 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்து உள்ளனர். 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது முக்கியம் வாய்ந்ததாக அழகர் கோவில் திகழ்கிறது. ஆண்டாள் சார்பாக ராமானுஜருக்கு அமுது செய்வித்து அக்காரவடிசில் ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழி ஒன்பதாம் பத்து பாசுரங்கள் 67 களில் பின்வருமாறு பாடியிருக்கிறார்.

மேலும் படிக்க : ஆன்மிகம் அறிவோம்.. ஸ்தல வரலாறு..!!

“நறு பொழில்களும், திருமாலிருஞ்சோலை நம்பிக்கு, அடியேன் நூறு தொடர்களில் நிறைந்த வெண்ணை, வாயால் நேர்ந்து வைத்தேன் நூறு தடாவில் நிறைந்த வெண்ணை வாயால் நேர்ந்து வைத்தேன்; நூறு தடா இக்கலையில் நிறைந்த அக்காரவடிசிலும் வார்த்தையில் சொன்னேன். ஏறிவரும் திருவுடையார் ஆன அழகர் இன்று வந்து இவற்றை ஏற்றுக் கொள்வாரோ?”

“தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் அழகர் பிரான் இன்று இங்கு எழுந்தருளி இத்தனையும் அமுது செய்வதோடு மட்டுமல்லாமல் அடியேன் மனத்தில் வந்து நிலைபெற்றால், அடியேன் ஒரு தடாவுக்கு நூறு ஆயிரம் தடாக்களாக சமர்ப்பித்து, அனைத்து கைங்கரியங்களும் செய்வேன்.”

ஆனால், அரண்மனை சேர்ந்துவிட்ட ஆண்டாளால் தன் மேற்கூறியபடி 100 தடாக்களில் வெண்ணெயும், நூறு தடாக்களில் அக்காரவடிசல் அழகருக்கு அளிக்க இயலாது போயிற்று. பிற்காலத்தில், ஆண்டாளின் நாச்சியார் திருமொழி ராமானுஜர் காலட்சேபம் செய்து வரும் காலத்தில், மேலே குறிப்பிட்டுள்ள இந்தப் பாசுரம் வந்தபொழுது, “ஆண்டாளின் வார்த்தைகள் வெறும் வாய் வார்த்தையாக மட்டும் போய்விடக்கூடாது;

மேலும் படிக்க : 108 திவ்ய தேசங்கள்

காரியத்தில் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதனை உடனே சரிசெய்ய வேண்டும்.” என்று அப்போதே திருமாலிருஞ்சோலை புறப்பட்டு, அங்கு நூறு தடா நிறைந்த வெண்ணெயும், நூறு தடா நிறைந்த அக்காரவடிசிலும் அழகருக்கு அமுது செய்வித்தருளினார்கள். அதன் பின்னர் உடனே ராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் அடி வணங்கி நிற்க, ஆண்டாளும் இவர் செய்த காரியத்திற்கு மனமுவந்து, “நம் அண்ணரே!” என்று வணங்கினார்.

இதனாலேயே, “பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னாள் வாழியே” என்று ஆண்டாள் வருத்தப்படுகிறாள். இது நடந்தது மார்கழி மாதம் 27 ஆம் நாள் இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக இந்நாள் வரையிலும் ஒவ்வொரு வருடமும் மார்கழி திங்கள் 26ம் நாள் அவருக்கு நூறு தடா வெண்ணெயும் நூறு தடா அக்காரவடிசலும் அமுது செய்விக்கபடும்.

மேலும் படிக்க : ஆன்மிகம் அறிவோம்.. ஸ்தல வரலாறு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *