ஆன்மிகம்ஆலோசனை

108 திவ்ய தேசங்கள்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108. அவை 108 திவ்ய தேசங்கள் எனப்படும். இவற்றில் 105 தலங்கள் இந்தியாவில், 1 நேபாளில் உள்ளன.

இவற்றைத் தவிர மற்ற 2 தலங்கள் வானுலகில் உள்ளன. 108 தலங்களும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடளைப் பாடுவது ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.

108 திவ்ய தேசங்கள்

1- திருவரங்கம், திருச்சி

2- திருக்கோழி, திருஉறையூர் (உறையூர் பகுதி), திருச்சி

3-திருத்தஞ்சை மாமணிக் கோயில், தஞ்சாவூர்

4- அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள், திருச்சி

5- உத்தமர் கோயில், திருச்சி

6- திருவெள்ளறை, திருச்சி

7- புள்ளபூதங்குடி, கும்பகோணம்

8- கோயிலடி, திருச்சி

9- ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில், கும்பகோணம்

10- தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில், குத்தாலம்

11- சிறு புலியூர், சீர்காழி

12- திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், கும்பகோணம்

13- தலைச்சங்காடு, சீர்காழி

14-கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில், கும்பகோணம்

15- கண்டியூர், தஞ்சாவூர்

16- ஒப்பிலியப்பன், கும்பகோணம்

17- திருக்கண்ணபுரம், சீர்காழி

18- திருவாலி, திருநகரி, சீர்காழி

19- நாகப்பட்டினம் (திருநாகை)

20- நாச்சியார்கோயில், கும்பகோணம்

21- நாதன் கோயில், கும்பகோணம்

22- திருஇந்தளூர், மாயவரம்

23- திருச்சித்ரகூடம், சிதம்பரம் சீர்காழி

24- திருக்காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி

25- திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை), கும்பகோணம்

26- திருக்கண்ணங்குடி, சீர்காழி

27- திருக்கண்ணமங்கை, கும்பகோணம்

28- கபிஸ்தலம், கும்பகோணம்

29- திருவெள்ளியங்குடி, கும்பகோணம்

30- திருமணிமாடக் கோயில், சீர்காழி

31- வைகுந்த விண்ணகரம், சீர்காழி

32- அரிமேய விண்ணகரம், சீர்காழி

33- திருத்தேவனார்த் தொகை, சீர்காழி

34- வண்புருடோத்தமம், சீர்காழி

35- செம்பொன் செய்கோயில், சீர்காழி

36- திருத்தெற்றியம்பலம், சீர்காழி

37- திருமணிக்கூடம், சீர்காழி

38- திருக்காவளம்பாடி, சீர்காழி

39- திருவெள்ளக்குளம், சீர்காழி

40- திருப்பார்த்தன் பள்ளி, சீர்காழி

41- திருமாலிருஞ்சோலை, மதுரை

42- திருக்கோஷ்டியூர், திருகோஷ்டியூர்

43- திருமெய்யம், புதுக்கோட்டை

44- திருப்புல்லாணி, இராமநாதபுரம்

45- திருத்தண்கால், மதுரை

46- திருமோகூர், மதுரை

47- கூடல் அழகர் கோயில், மதுரை

48- ஆண்டாள் திருக்கோவில், திருவில்லிபுத்தூர்

49- ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர், (நவதிருப்பதி) திருநெல்வேலி

50- திருத்துலைவில்லி, மங்கலம் இரட்டைத் திருப்பதி (நவதிருப்பதி) திருநெல்வேலி

51-வானமாமலை, திருநெல்வேலி

52- திருப்புளிங்குடி, (நவதிருப்பதி) திருநெல்வேலி

53- திருப்பேரை, (நவதிருப்பதி) திருநெல்வேலி

54- ஸ்ரீவைகுண்டம், (நவதிருப்பதி) திருநெல்வேலி

55- திருவரகுணமங்கை (நத்தம்), (நவதிருப்பதி) திருநெல்வேலி

56- திருக்குளந்தை, (நவதிருப்பதி) திருநெல்வேலி

57-திருக்குறுங்குடி திருநெல்வேலி

58- திருக்கோளூர், (நவதிருப்பதி) திருநெல்வேலி

59- திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், கோவளம்

60- திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்), கன்னியாகுமரி

61- திருக்காட்கரை, கேரளம்-கோட்டயம்

62- திருமூழிக்களம், கேரளம் -கோட்டயம்

63- திருப்புலியூர், கேரளம் – கோட்டயம்

64- திருச்செங்குன்றூர், கேரளம் – கோட்டயம்

65- திருநாவாய், கேரளம் – திருச்சூர்

66- திருவல்லவாழ், கேரளம் – கோட்டயம்

67- திருவண்வண்டூர், கேரளம் – கோட்டயம்

68- திருவட்டாறு, கன்னியாகுமரி

69- திருவித்துவக்கோடு, கேரளம்-திருச்சூர்

70- திருக்கடித்தானம், கேரளம் – கோட்டயம்

71- திருவாறன்விளை, கேரளம் – கோட்டயம்

72- திருவயிந்திபுரம், கடலூர்

73- திருக்கோவலுர், கடலூர்

74- திருக்கச்சி, காஞ்சிபுரம்

75- அட்டபுயக்கரம், காஞ்சிபுரம்

76- திருத்தண்கா(தூப்புல்), காஞ்சிபுரம்

77- திருவேளுக்கை, காஞ்சிபுரம்

78- திருப்பாடகம்கா, காஞ்சிபுரம்

79- திருநீரகம், காஞ்சிபுரம்

80- நிலாத்திங்கள், காஞ்சிபுரம்

81- திரு ஊரகம், காஞ்சிபுரம்

82- திருவெக்கா, காஞ்சிபுரம்

83- திருக்காரகம், காஞ்சிபுரம்

84- திருக்கார்வானம், காஞ்சிபுரம்

85- திருக்கள்வனூர், காஞ்சிபுரம்

86- திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்

87- திருப்பரமேச்சுர விண்ணகரம், காஞ்சிபுரம்

88- திருப்புட்குழி, காஞ்சிபுரம்

89- திருநின்றவூர், சென்னை

90- திரு எவ்வுள், சென்னை

91-திருநீர்மலை, சென்னை

92-திருவிடவெந்தை, சென்னை

93- திருக்கடல்மல்லை, சென்னை

94- திருவல்லிக்கேணி, சென்னை

95- திருக்கடிகை (சோளிங்கர்), சென்னை

96- திருவேங்கடம், ஆந்திரம்

97, அகோபிலம் (சிங்கவேள்குன்றம்), ஆந்திரம்

98- திருவயோத்தி, உத்தரப் பிரதேசம்

99-நைமிசாரண்யம், உத்தரப் பிரதேசம்

100- முக்திநாத், நேபாளம்

101- பத்ரிகாச்ரமம், உத்தராகண்டம்

102-தேவப்ரயாகை, உத்தராகண்டம்

103-திருப்பிரிதி, உத்தராகண்டம்

104-திருத்துவாரகை, குஜராத்

105-வடமதுரை, டெல்லி

106- ஆயர்பாடி, டெல்லி

107- திருப்பாற்கடல் (புவியில் இல்லை)

108- பரமபதம் நாதன் திருவடி

108 திவ்ய தேசங்கள் என்பவை 12 ஆழ்வார்களால் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பாடப் பெற்ற சிறப்பு மிக்க வைணவத் திருத்தலங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *