ஆந்திராவில் 108, 104 சேவைகள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியால் துவங்கப்பட்டது
108 தெரியும் அது என்ன 104?
108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் 104 மொபைல் ஹாஸ்பிடல் சர்விஸ். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இந்த ரெண்டு சேவைகளையும் இன்று கிரீன் சிக்னல் காமிச்சு துவங்கி வைத்திருக்கிறார் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி.
1 ஜூலை 2020 விஜயவாடாவில் 108 மற்றும் 104 சேவையை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி துவங்கி வைத்தார். கடற் போன்ற வண்டிகள் திரளாக பென்ஸ் நகரில் அமைந்திருக்க கிரீன் சிக்னல் காண்பித்து துவங்கி வைத்தார்.
பென்ஸ் வட்டத்திலிருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வரை எம்.ஜி. ரோட்டில் அணிவகுத்து இருந்த 432 ஆம்புலன்ஸ்களும் (108 சேவை) 656 மொபைல் மருத்துவ பிரிவுகளும் (104 சேவை) வண்டிகள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. அன்று மூலம் இதன் படப்பிடிப்பு ரெக்கார்ட் செய்யப்பட்டது. இந்த காணொளிகள் இணையத்தளத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக உள்ளது.
புதன்கிழமை அன்று இந்த விழா நடக்க செவ்வாய்க்கிழமை இந்த சேவைக்கான தொகை விவரங்கள் வெளியிடப்பட்டன. சுகாதார அமைச்சர் ஏ.காளி கிருஷ்ணா சீனிவாஸ், 201 கோடியை செலவழித்து புதிய ஆம்புலன்ஸ் சேவைகளும், 108 சேவையின் ஒரு பகுதியாக முதல் முறையாக 26 புதிய நியோ நேடல் என்று சொல்லப்படும் பிறந்த குழந்தைகளுக்காக ஆம்புலன்ஸ்கள் கிடைக்கப் பெறுகின்றன என்று கூறினார்.
இந்த 108 104 சேவைக்கான துவக்க விழாவில் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஏ.காளி கிருஷ்ணா சீனிவாஸ், பெடிரெட்டி ராமச்சந்திர ரெட்டி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.